சினிமா
விஜய் பட இயக்குநருடன் இணையும் சூப்பர் ஸ்டார்..!

விஜய் பட இயக்குநருடன் இணையும் சூப்பர் ஸ்டார்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பல இளம் நடிகர்களுக்கு சவால் போட்டு நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி ” படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றார்.அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வரும் இவர் இந்த நிலையில் தற்போது விஜயின் “ஜனநாயகன் ” பட இயக்குநர் ஹெஜ் .வினோத் ரஜினியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஜினியிடம் கதை சொல்லியுள்ளார். அது அவருக்கும் சௌந்தர்யாவிற்கும் மிகவும் பிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும் வீர தீர சூரன் பட இயக்குநர் அருண்குமாருடனும் ரஜினி படம் குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ரஜினி நடிப்பில் ஹெஜ் .வினோத் இயக்கும் படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.