இலங்கை
வெப்பத் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு

வெப்பத் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு
இணுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது-75) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றுமுன்தினம் மாட்டுக்கு பூச்சி மருந்து வாங்கச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெப்பத் தாக்கம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து செல்லும்போது வெப்பத்தாக்கம் காரணமாக தோட்டத்துக்கு வீழ்ந்து இவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.