டி.வி
9 மாதங்களில் முடிவுக்கு வரும் சீரியல்; டி.ஆர்.பி ரேட்டிங் தான் காரணமா? சன் டி.வி சீரியல் அப்டேட்

9 மாதங்களில் முடிவுக்கு வரும் சீரியல்; டி.ஆர்.பி ரேட்டிங் தான் காரணமா? சன் டி.வி சீரியல் அப்டேட்
மாதத்திற்கு ஒரு புது சீரியலை களமிறக்கி வரும் சன்டிவியில், குறுகிய இடைவெளியில் டி.ஆர்.பியில், வரவேற்பை பெறாத சீரியல்கள் முடிவுக்கு வருவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய சீரியல் ஒன்று முடிவக்கு வர உள்ளது.சன்டிவியில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் புன்னகைப் பூவே. பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஹர்ஷ் நாக்பால், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். முன்னதாக இந்த சீரியலில் நாயகியான கலைவாணி கேரக்டரில் நடித்து வந்த நடிகை, சைத்ரா சக்காரி விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா அந்த கேரக்டரில் நடிக்க தொடங்கினார்.குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரை ஒருவர் விரும்பும் கலைவாணி மற்றும் செழியன் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல், ஓரளவு வரவேற்பை பெற்று வந்தாலும், டி.ஆர்.பி ரேட்டிங்கில், வெகுவாக குறைந்து வருவதால், இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் கட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல், ஒளிபரப்பாக தொடங்கி 9 மாதங்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள் முடிவுக்கு வர உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்க சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புன்னகைப்பூவே சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், அந்த நேரத்தில் நடிகர் கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய சீரியலான வினோதனி, சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.