வணிகம்
Gold Rate Today: ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம் விலை… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Gold Rate Today: ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம் விலை… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறதுதங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.நேற்று அதிச்சி தரும் விதமாக இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. இந்தநிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. கிராம் ரூ. 9,075 க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.72,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ. 111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,11,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.