விளையாட்டு
KKR vs CSK highlights: கடைசி ஓவர் வரை பரபரப்பு; 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

KKR vs CSK highlights: கடைசி ஓவர் வரை பரபரப்பு; 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, KKR vs CSK LIVE Cricket Score10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியில் இருந்து ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.இவர்களில், ரஹ்மானுல்லா குர்பாஸ் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே களமிறங்கி அதிரடியாக ஆடினார். மறுபுறம், நூர் அகமது பந்துவீச்சில் சுனில் நரைன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர், 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் அடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, 1 ரன் மட்டுமே எடுத்து நூர் அகமதுவிடம் தனது விக்கெட்டை இழந்தார்.இதனிடையே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 48 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், மனிஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் கரம் கோர்த்து விளையாடினர். இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை கணிசமான அளவு உயர்த்தியது. இதில் அதிரடி காட்டிய ரஸ்ஸல் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்க விட்டார். அந்த வகையில், 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் அடித்த அவரது விக்கெட்டை நூர் அகமது வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய ரிங்கு சிங்கின் விக்கெட்டையும் நூர் அகமது வீழ்த்தினார்.இறுதியாக, 36 ரன்களுடன் மனிஷ் பாண்டேவும், 4 ரன்களுடன் ராமன்தீப் சிங்கும் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் இருந்து அபாரமாக பந்து வீசிய நூர் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.அதன்படி, 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.சென்னை அணியில் இருந்து ஆயுஷ் மத்ரே மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிர்ச்சி அளிக்கும் விதமாக இவர்கள் இருவருமே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்தபடியாக, உர்வில் படேலும், ரவிச்சந்திரன் அஷ்வினும் களம் கண்டனர்.இவர்களில் உர்வில் படேல் மட்டும் 11 பந்துகளில் 4 சிக்ஸர்கள். ஒரு பவுண்டரி என அதிரடி காண்பித்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அஷ்வின் 8 ரன்களுடன் வந்த வேகத்தில் நடையை கட்டினார். ஜடேஜாவும் 19 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் பொறுப்பாக ஆடிய டெவால்ட் ப்ரீவிஸ், சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டார். மறுபுறம், ஷிவம் தூபேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அதன்படி, 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரி விளாசிய டெவால்ட் ப்ரீவிஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக தோனி களமிறங்கினார். தூபேவும், தோனியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், 45 ரன்களில் தூபே அவுட்டானார்.அதன் பின்னர், வந்த நூர் அகமது 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியாக, வெற்றியை நோக்கி சென்னை அணியை தோனி அழைத்துச் சென்றார். 18 பந்துகளில் ஒரு சிக்ஸர் மட்டும் அடித்து 17 ரன்களை தோனி அடித்திருந்தார்.இறுதியில், 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 183 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், மொயின் அலி, ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி. சென்னை சூப்பர் கிங்ஸ்: ஆயுஷ் மத்ரே, உர்வில் படேல், டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், எம்.எஸ். தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.