இலங்கை
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடும் செல்வராசா கஜேந்திரன்

அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடும் செல்வராசா கஜேந்திரன்
தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் பொய்யான கருத்துகளைத் தெரிவித்து வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தலினூடாக தெளிவான பதிலொன்றை வழங்கியுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகக் கடந்த இரண்டு வருடங்களாகப் பௌர்ணமி தினத்தில் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இதனையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் உண்மையாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு, குறித்த காணிகள் அதன் பூர்வீக உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.