Connect with us

சினிமா

ஆர்த்தி ரவி விவாகரத்துக்கு நான் காரணம் இல்ல..அவர் என்னிடம் வந்ததே!! கெனிஷா சொன்னது இதான்..

Published

on

Loading

ஆர்த்தி ரவி விவாகரத்துக்கு நான் காரணம் இல்ல..அவர் என்னிடம் வந்ததே!! கெனிஷா சொன்னது இதான்..

தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர்களில் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்து வந்தவர் ஜெயம் ரவி. படங்களை பற்றிய செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் இருந்து இவரது பட செய்திகளுக்கு பதிலாக சொந்த விஷயத்தின் செய்திகள் தான் அதிகம் வலம் வருகிறது.மனைவியுடன் விவாகரத்து அறிவிப்பு, பெயரை ரவி மோகன் என மாற்றியது, கம்பெனியை மும்பைக்கு மாற்றியது என நிறைய மாற்றங்கள். சமீபத்தில் இவர் கிசுகிசுக்கப்பட்ட பாடகி கெனிஷாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வர பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஆர்த்தி – ரவி விவாகரத்துக்கு கெனிஷா தான் காரணம் என்று கூறப்பட்டதை தொடர்ந்து அதற்கு விளக்கமும் கொடுத்தார் கெனிஷா.சமீபத்தில் கெனிஷா, என்மீது சுமத்தப்படும் புகார்களில் உண்மையில்லை, என்னால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அப்படியே அமைதியாக இருக்க முடியாது. என் கண்ணியத்தை யாரும் கேள்விக்குறியாக்கவிட மாட்டேன். நான் பாடிய இதை யார் சொல்வாரோ பாடல் ரவி மோகன் வெளியிட்ட போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன். பின் நானும் அவரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.ரவி மோகன், அவரது மனைவியை பிரிய நான் தான் காரணம் என்று கூறி சில செய்திகளை பார்த்தேன். அதில் உண்மையில்லை. மனமொத்து பிரிய, தன் வக்கீல், மூலம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியப்பின் தான் ரவி மோகன் என்னை சந்தித்தார், தெரபிக்காக வந்தார்.சென்னையில் இருக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம், என பெங்களூர் வந்தார். அவரை உடனே கிளையண்டாக நான் ஏற்கவில்லை, என்னால் அவருக்கு உதவி செய்ய முடியும் என்பதை முதலில் உறுதி செய்ய விரும்பினேன்.ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டதால் எமோஷ்னலாக பாதிக்கப்பட்டார் ரவி மோகன். அவருக்கு நடந்த கொடுமை வேறு எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ நடக்கவே கூடாது. அந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கெனிஷா ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன