சினிமா
கல்யாணமான பையன் கூட என்ன Friendship-னு!! மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே ஆதங்கம்..

கல்யாணமான பையன் கூட என்ன Friendship-னு!! மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே ஆதங்கம்..
கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஸ்வாதி கொண்டே, கன்னட படத்தில் நடித்து பின் தமிழ்நாட்டு பக்கம் வந்து விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்வாதி. பிரியா ரோலில் நடித்த ஸ்வாதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், சன் டிவியில் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க துவங்கினார். மேலும் மெய்யழகன் படத்தில் அரவிந்த்சுவாமிக்கு தங்கையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஈரமான ரோஜாவே, மூன்று முடிச்சு சீரியல்களில் ஜோடியாக நடித்த திரவ்யம் ராஜகுமாரன் பற்றி எமோஷ்னலாக பேசியுள்ளார்.அதில், திரவ் எனக்கு ஒரு ஏஞ்சல். நிறைய பேர் நிறைய பேசுவாங்க, என்ன் கல்யாணமான பையன் கூட என்ன Friendship உனக்கு. ஏன் அவன் மனுஷன் கிடையாதா? ஏன் அவங்க கூட Friendship பண்ணக்கூடாதா? நான் என் நண்பர்களிடம் எதுவும் எதிர்ப்பார்க்கவில்லை, அன்பு ஒன்றுக்காகத்தான், அவ்வளவு தான். அந்த நபர், அக்கா எல்லோரும், நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அவர்கள் நினைக்கும் போது என்ன அவர்களிடம் நான் எதிர்ப்பார்க்கணும் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.மேலும் பேசிய ஸ்வாதி, இது புது கிடையாது, வதந்தி என்பது புதுசு கிடையாது. வெளியில் பேசினால் அப்படி பேசுவாங்க, ஹோட்டலுக்கு போய் வெளியில வந்தா, ரெண்டு பேரும் ஒன்னா போறாங்கன்னு பேசுவாங்க.அப்படி இருந்தா என்ன, அவங்க ஒன்னும் பில் கட்டப்போறது இல்லை. ஒருவரின் வார்ழ்க்கையின் பாதையை யாரும் ஜட்ஜ் பண்ண வேண்டாம். இது போல நிறைய வந்துருக்கு, போடான்னு போய்விடுவேன். நாங்கள் நண்பர்கள் தான், அதைத்தாண்டி எதுவும் இல்லை, எதாவது ஒன்று என்றால் நானே சொல்வேன், அவருக்கும் ஏதாவது இருந்தால் அவரும் சொல்லுவார் என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மனைவி என்ன சொல்லுவார், நினைக்கிறார் என்று எனக்கு தெரியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நான் போகமுடியாது. அவர் தனியாக இருந்திருந்தால், வாட மச்சான் என்று கூப்பிட்டு பேசுவேன், யாரு எதுவேணாமும் சொல்லலாம், நாங்கள் நண்பர்கள் தான் அதை மாற்றமுடியாது என்று ஸ்வாதி கொண்டே தெரிவித்துள்ளார்.