Connect with us

பொழுதுபோக்கு

கைது செய்யப்படும் முத்து; ஸ்ருதி அம்மா எடுத்த வீடியோ: ரோஹினி – மனோஜ் பிரிய போறாங்களா?

Published

on

Muthu shruti Mother Police

Loading

கைது செய்யப்படும் முத்து; ஸ்ருதி அம்மா எடுத்த வீடியோ: ரோஹினி – மனோஜ் பிரிய போறாங்களா?

சிறகடிக்க சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து போலீஸ் பைக்கில் காரை விட, அதனை ஸ்ருதியின் அம்மா வீடியோ எடுத்துவிடுகிறார். மறுபக்கம், ரோஹினிக்கு மனோஜ் நோஸ்கட் கொடுக்கிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய எபிசோட்டில், கார் மீது முட்டை விழுந்துவிட்டதால், முத்து மீனா இருவரும் அதனை கழுவுகின்றனர். ஆனாலும் முட்டை ஸ்மெல் போகவில்லை. இதனால் என்ன செய்வது என்று யோசிக்க, ரவி முட்டை ஸ்மெல் எவ்வளவு கழுவினாலும் போகாது என்று கூறி கார் சாவியை வாங்கி உள்ளேயும் வெளியேறும் ஸ்பிரே அடித்து விடுகிறான். வெளியில் நிற்கும் சிட்டியின் ஆட்கள் இதனை பார்த்தக்கொண்டு இருக்கின்றனர்,தனது ஆட்களுக்கு போன் செய்யும் சிட்டி, என்ன நடக்கிறது என்று விசாரிக்க, ரவி காரில் ஸ்பிரே அடித்துவிட்டு வீட்டுக்கு செல்கிறான். வீட்டில், கார் சாவி எங்கே என்று மீனாவிடம் கேட்டு முத்து சண்டைபோட, ரவி கார் சாவியை எடுத்து வந்து கொடுக்கிறான். அதனைத் தொடர்ந்து முத்து காரை ஸ்டார்ட் செய்ய சிட்டியின் ஆட்கள் பின்தொடர்கின்றனர். முத்து சிறிது தூரம் சென்றவுடன்,  சிட்டியின் ஆட்கள் முத்துவின் காரை உரசிவிட்டு செல்கின்றனர்.இதை பார்த்து ஆவேசப்படும் முத்து காரை வேகமாக ஓட்ட, அப்போது தான் பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அடுத்து என்ன செய்வது என்று முத்து யோசித்துக்கொண்டே வண்டியை ஓட்ட எதிரில், ஸ்கூல் பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாத முத்து மறுபக்கமாக வண்டியை திருப்ப, போலீஸ் பைக் மீது கார் மோதிவிடுகிறது. இதை பார்த்த கான்ஸ்டபிள் அருண், முத்து வேண்டுமென்றேதான் காரில் மோதியதாக நினைக்கிறான்.இதன் காரணமாக முத்துவை போலீஸ் கைது செய்ய இதை ஸ்ருதியின் அம்மா வீடியோ எடுத்துவிடுகிறார். அதே சமயம் முத்துவின் காரை போலீஸ் எடுக்க, சார் அதை எடுக்காதீங்க, அதில் பிரேக் இல்லை என்று சொல்ல, அவனை பேச விடாமல் போலீஸ் அழைத்து செல்கின்றனர். மறுபக்கம், ரோஹினி ஷோரும்க்கு வந்து ஒரு டிவியை விற்பனை செய்ய, அங்கு வரும் மனோஜ் நீ எதுங்கு இங்க வந்த அம்மா தான் பேசக்கூடாதுனு சொல்லிவிருக்காங்கள என்று கேட்கிறான்.இதை கேட்டு கடுப்பாகும் ரோஹினி, உங்க அம்மா சொல்வதை கேட்டால், நாம நிரந்தரமா பிரிந்துவிடுவோம் என்று சொல்ல, அம்மா எது செஞ்சாலும் நல்லதுக்குதான் என்று மனோஜ் சொல்ல, இதை கேட்டு கோபப்படும் ரோஹினி அங்கிருந்து கோபமாக புறப்பட, அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன