Connect with us

சினிமா

தாத்தா ஆனா பிறகும் திருந்தவேயில்லை…! ரோபோ சங்கரை வெளுத்து வாங்கிய புளூசட்டை மாறன்..!

Published

on

Loading

தாத்தா ஆனா பிறகும் திருந்தவேயில்லை…! ரோபோ சங்கரை வெளுத்து வாங்கிய புளூசட்டை மாறன்..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக புகழ் பெற்ற ரோபோ சங்கர், திரை உலகில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், சமூக ஊடகங்கள் எனப் பல தளங்களில் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கின்றார். அவரது நகைச்சுவைப் பாணி மற்றும் மக்களோடு கூடிய தொடர்பு அவருக்கு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்க வைத்தது. இப்போது அவர் மீது கடுமையான விமர்சனம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் யூடியூப் விமர்சகர் மற்றும் சமூக விமர்சகரான புளூ சட்டை மாறன்.புளூ சட்டை மாறன் தனது சமீபத்திய வீடியோவில், ரோபோ சங்கரின் தற்போதைய நிலையை விமர்சித்துள்ளார். அதன்போது அவர் கூறியதாவது, “இப்போ ரோபோ சங்கருக்கு காமெடி எடுப்படவில்லை. அதனால தான் சிவகார்த்திகேயன் இவரை தன்னோட படத்திலிருந்து கழட்டி விட்டார்.” என்றார். இது அவருடைய திரை உலக இடத்தை இழக்க வைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.திரையுலகில் வாய்ப்பு குறையத் தொடங்கிய பின் ரோபோ சங்கர் தனது குடும்ப நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தி யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். மாறன் அதைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.அதன்போது அவர் கூறியதாவது, “கல்யாணம், வளைகாப்பு என அனைத்தையும்  வீடியோவா யூடியூப்பில் போடுறீங்க. 24 மணி நேரமும் யூடியூப்ல உங்க வீடியோதான். இப்போ தாத்தா ஆன பிறகு பேரனைக் கூட வீடியோ போடுறீங்க. தாத்தா ஆனா பிறகும் திருந்தாவிட்டால் இனி ஒன்றும் சொல்வதற்கு இல்லை.” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன