Connect with us

பொழுதுபோக்கு

திரும்பி வந்த மனைவி; எதிரிக்கு விழுந்த கத்திகுத்து: கல்யாணம் நடக்குமா? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

Published

on

Vetri Samu and Shanu

Loading

திரும்பி வந்த மனைவி; எதிரிக்கு விழுந்த கத்திகுத்து: கல்யாணம் நடக்குமா? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

பரணியின் வருகை.. ஷாக்கிங்கில் சௌந்தரபாண்டி, நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் பரணி அமெரிக்கா கிளம்பி செல்ல சண்முகம் வருத்தத்தில் இருந்த நிலையில் இன்று, சண்முகம் பரணியின் பிரிவை தாங்க முடியாமல் புலம்பி கொண்டிருக்க அவனது பக்கத்தில் பரணி உட்கார்ந்திருப்பது போலவே பீல் செய்கிறான். இதையடுத்து காலிங் பெல் அடிக்க சண்முகம் கதவை திறக்க பரணி நிற்பதை பார்த்து பொய் என புலம்ப பரணி நான் தான் உண்மையாவே வந்துட்டேன் டா என்று ஷாக் கொடுக்கிறாள்.ஏலே நீ அமெரிக்கா போகலையா என்று கேட்க பாஸ்போர்ட் தொலைந்து போச்சு என்று சொல்கிறாள். நான் தானே எடுத்து பேக்ல வச்சேன்.. அது எப்படி தொலைந்து போகும், குடு நான் பார்க்கிறேன் என்று பையை வாங்க போக பரணி தர மறுக்கிறாள். என்னை பிரிய மனசில்லாமல் தான் வந்துட்டியா என்று கேட்க பரணி அதெல்லாம் இல்லை என்று சொல்கிறாள்.வீட்டில் உள்ள எல்லாரும் பரணியை பார்த்து சந்தோசப்பட பரணி குடும்பமா சேர்ந்து என்ன ஏமாத்திடீங்க என்று ஒரு ட்ராமா போடுகிறாள். வைகுண்டம் எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம் என்று பரணியை உள்ளே அழைத்து செல்கிறார். சண்முகம் திரும்ப திரும்ப எனக்காக தானே வந்துட்ட என்று கேட்க பரணி இல்லை என அடம் பிடிக்கிறாள்.அடுத்து சௌந்தரபாண்டி வீட்டில் தூங்கி கொண்டிருக்க சண்முகம் போனில் இருந்து வீடியோ கால் வருகிறது, இந்த வெறும் பையன் ஏன் போன் பண்றான் என்று போனை அன்டன் செய்ய அங்கு பரணி இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். நீ அமெரிக்கா போய்டியா என்று கேட்க சண்முகம் முகத்தை பார்த்து இவனும் அமெரிக்கா வந்து இருக்கானா? என்று கேட்கிறார்.பரணி பாஸ்போர்ட் தொலைந்து போச்சு திரும்பி வந்துட்டேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். அடுத்த நாள் காலையில் கிளம்பி வீட்டிற்கு வர வீரா கோலமாவை முகத்தில் வீசி விடுகிறாள். சௌந்தரபாண்டி முதல் வேலையா அந்த பாஸ்போர்ட்டை நான் ரெடி பண்ணி தரேன் என்று கிளம்பி செல்கிறார். மற்றவர்கள் எல்லாரும் பரணியின் முடிவால் சந்தோசப்படுகின்றனர். அடுத்து ரத்னாவுக்கு சட்ட ரீதியாக வெங்கடேஷிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்து ரத்னாவுக்கும் அறிவழகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மகேஷ்க்கு கத்திக்குத்து.. காப்பாற்ற வந்த கார்த்தி, சாமுண்டீஸ்வரிக்கு ஷாக் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகேஷ் கடத்தி வைத்திருப்பது சாமுண்டீஸ்வரி தான் என்ற விஷயம் ரேவதிக்கு தெரிய வந்த நிலையில் இன்று, கார்த்திக்கு போன் கால் வர அவன் அருணை சென்று சந்திக்கிறான். இன்னொரு பக்கம் ரேவதி யாருக்கும் தெரியாமல் மகேஷை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு வருகிறாள். கட்டப்பட்டு கிடக்கும் மகேஷை காப்பாற்றுகிறாள். இங்கிருந்து தப்பித்து போ என்று சொல்கிறாள்.அவன் ரேவதியை வா எங்கேயாவது போய் விடலாம் என்று சொல்கிறான். ஆனால் ரேவதி தனக்கு கல்யாணம் ஆகிருச்சு.. அதெல்லாம் சரியா வராது நீ தப்பித்து போ என்று சொல்கிறாள். இந்த சமயத்தில் ரவுடிகள் அங்கு வந்து விடுகின்றனர். ரவுடிகள் மகேஷை பிடிக்க முயலும் போது அவனை கத்தியால் குத்தி விட ரேவதி அதிர்ச்சி அடைகிறாள்.  அடுத்து ரவுடிகள் அங்கிருந்து தப்பி செல்ல கார்த்திக் ரேவதி எங்கே போனா என்று சந்தேகப்பட்டு இங்கு வருகிறான்.அப்போது மகேஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கவனித்து அவனை தனக்கு தெரிந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். சாமுண்டேஸ்வரி குடோனுக்கு வர அங்கு யாரும் இல்லாததை பார்த்து குழப்பம் அடைகிறாள். மாயா வீட்டிற்கு செல்ல அங்கு அவள் மகேஷை காணவில்லை என புலம்பியபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துளசிக்கு தாலி கட்ட தயாராகும் வெற்றி.. அஞ்சலியின் முடிவால் டென்ஷனில் தவிக்கும் மகேஷ் – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் மீனாட்சி வெற்றியை ஏற்றி விட அவன் துளசியிடம் காதலை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்த நிலையில் இன்று, கோவிலில் லட்சுமி பிரசாதம் கொடுக்க கவின் அதை வாங்கிக் கொள்கிறான். வரதராஜன் தன்னுடைய குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க கவின் அங்கு வர என்னடா அது என்று கேட்க பிரசாதம் என்று கொடுக்கிறான். அதை சாப்பிட்டு வரதராஜன் என் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி இருக்கு யார் கொடுத்தது என்று கேட்கிநான்.இதை கேட்ட கவின் லட்சுமியை கை காட்டுகிறான். உடனே வரதராஜன் அந்த பிரசாதத்தை தூக்கி கீழே போட்டு விடுகிறார். இதனைத் தொடர்ந்து கோவிலில் எல்லோரும் ஒன்றாக உட்கார துளசி பக்கத்தில் மாப்பிள்ளை வந்து உட்காருகிறான். இதைப் பார்த்து வெற்றி பொசசிவ் ஆக மீனாட்சி நீங்க இப்படியே இருந்தா துளசிக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகும் உங்களுக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் ஆகும் அவ்வளவுதான் என்று ஏற்று விடுகிறாள்.இதைத் தொடர்ந்து வெற்றி தனது நண்பர்கள் மூலமாக அந்த மாப்பிள்ளை அங்கிருந்து எழுப்பி வெளியே அழைத்துச் செல்ல வெற்றி துளசி பக்கத்தில் வந்து உட்காருகிறான். அப்போது டிவியில் சின்னத்தம்பி தாலி சென்டிமென்ட் காட்சி ஒளிபரப்பாக ஏற்று துளசி களத்தில் தாலி கட்டி விடலாம் என்ன என்று யோசிக்கிறான். அதன் பிறகு அஞ்சலி மகேஷிடம் இன்னைக்கு நான் இவங்க கூடவே இருக்கேன் நீங்க வேணா வீட்டுக்கு போங்க என்று சொன்ன யோசித்த மகேஷ் உன்னுடைய சந்தோஷம் தான் என்னுடைய சந்தோஷம் என்று சொல்கிறான்.ஆனால் அஞ்சலியை விட்டுச் செல்ல மனமில்லாமல் தவிக்கிறான். அஞ்சலி தன்னுடைய நடவடிக்கைகள் பற்றி சொல்லிவிட்டால் என்ன செய்வது என டென்ஷன் ஆகிறான். ஆனால் அஞ்சலி துளசியுடன் மகேசை பற்றி நல்லவிதமாக பேசி விட்டு இதை பார்த்த மகேஷ் நிம்மதியாகிறான். அதன் பிறகு எல்லோரும் தூங்கிய பிறகு வெற்றி அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து துளசி கழுத்தில் கட்ட தயாராகிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன