பொழுதுபோக்கு
மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்.. என்னதான் ஆச்சு அவருக்கு?

மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்.. என்னதான் ஆச்சு அவருக்கு?
இந்தாண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்.29ம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை 2025 அழகு போட்டி நிகழ்ச்சி நடந்துவருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்கு விஷால் சிறந்து விருந்தினராக கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஷால் மேடையில் பேசிவிட்டு இறங்கியபோது மயக்கமடைந்தார். விஷால் மயக்கமடைவதை பார்த்த சிலர் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் சற்று பதட்டம் நிலவியது.சமீபத்தில் நடந்த மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது. இதனால் அவரின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது அவர் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.விஷாலுக்கு என்ன ஆச்சு? என்ற பதட்டத்தில் ரசிகர்களும் அங்கு இருந்த பொதுமக்களும் இருந்தனர். இந்நிலையில் தற்போது விஷால் நலமுடன் இருப்பதாக வந்த தகவல் அனைவரையும் நிம்மதியடைய செய்துள்ளது. சாப்பிடாததும், கூட்ட நெரிசல் காரணமாகவும்தான் விஷாலுக்கு மயக்கம் ஏற்பட்டதாம். தற்போது விஷால் நலமுடன் இருக்கின்றார் என தகவல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.