சினிமா
“லவ் இன்சூரன்ஸ் கொம்பனி” வெளியாகும் திகதி அறிவிப்பு …!படக்குழுவின் புது அப்டேட் …!

“லவ் இன்சூரன்ஸ் கொம்பனி” வெளியாகும் திகதி அறிவிப்பு …!படக்குழுவின் புது அப்டேட் …!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் முக்கிய இடம் வகிப்பவர் விக்னேஷ் சிவன் இவர் இயக்கி அனைத்து படங்களும் வெற்றி பெற்றன. அந்த வகையில் இவர் தற்போது “லவ் இன்சூரன்ஸ் கொம்பனி” என்ற திரைப்படத்தினை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு அறிவித்துள்ளது.இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ். ஜே. சூர்யா மற்றும் கிருத்தி ஷெட்டி எனப் பலர் நடித்து வருகின்றனர். யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி மற்றும் ஷாரா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த பதத்தினை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படத்தினை செப்டம்பர் 18 திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளபாகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.