பொழுதுபோக்கு
ஆட்டோ ஓட்டும் ரோபோ சங்கர் மனைவி; வைரலாகும் வீடியோ பதிவு: மாஸ் என்ட்ரியா இருக்கே!

ஆட்டோ ஓட்டும் ரோபோ சங்கர் மனைவி; வைரலாகும் வீடியோ பதிவு: மாஸ் என்ட்ரியா இருக்கே!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்தரையில் பிரபலமாக காமெடி நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர், தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில், அவரது மனைவி பிரியங்கா சீரியலில் நடிகையாக களமிங்கியுள்ளார்.விஜய் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்தாலும், அவ்வப்போது, புதிய சீரியல்கள் ஒளிபரப்பவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தனம். சன்டிவியின் எதிர்நீச்சல், சீரியலில், ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் சிறப்பு தொற்றத்தில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.தனம் கேரக்டரில் கணவராக வரும் ஸ்ரீகுமார், ஒரு கட்டத்தில் இறந்துவிட, அவரது குடும்பத்தில் உள்ள 2 தங்கை 1 தம்பி ஆகியோரை முன்னேற்ற வேண்டும் என்று தனம் குடும்ப பொறுப்புகளை தனது கையில் எடுத்துக்கொள்கிறார். இதனால் கணவர் ஓட்டி வந்த ஆட்டோவை தான் ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த சீரியலில் தற்போது ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா நடித்துள்ளார்.பிரபல காமெடி நடிகராக இருந்த ரோபோ சங்கர், இடையில் உடல்நலக்குறைவு காரணமாக நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது நடிப்பை தொடங்கியுள்ளார். அதேபோல் அவரின் மகள், இந்திரஜா, விஜயின் பிகில், கார்த்தியின் விருமன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது உறவினரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.கணவர், மகளை தொடர்ந்து தற்போது பிரியங்காவும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். விஜய் டிவியின் தனம் சீரியலில், ஆட்டோ டிரைவராக அவர் நடித்துள்ளார். தனது கணவரின் ஆட்டோ ஸ்டாண்டில் பெண்களுக்கு இடமில்லை என்று சொல்லிவிட, தனம் பெண் ஆட்டோ ஸ்டேண்டில் வாய்ப்பு கேட்க போகிறார். அங்கு ஆட்டோ டிரைவராக பிரியங்கா வருகிறார். இவர் கெஸ்ட் ரோல் தானா அல்லது, தனத்தின் வாழ்க்கையில் முக்கிய நபராக இருப்பாரா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.