தொழில்நுட்பம்
ஆப்பிள் ஐபோனுக்கு டஃப் கொடுக்கும் சாம்சங்: களத்தில் ஸ்லிம் ஸ்மார்ட்போனை இறக்கி சவால்

ஆப்பிள் ஐபோனுக்கு டஃப் கொடுக்கும் சாம்சங்: களத்தில் ஸ்லிம் ஸ்மார்ட்போனை இறக்கி சவால்
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்லிம் ஸ்மார்ட்போன் (Slim Smartphone) ஆக கேலக்ஸி எஸ்-25 சீரீஸின் லேட்டஸ்ட் மாடல் ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்-25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 5.8 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ் சீரிஸில் அறிமுகமானதிலேயே மிகவும் மெலிதான ஸ்மார்ட்போனாகும்.ஸ்லிம் டிசைன் தவிர்த்து 200 எம்.பி ப்ரைமரி கேமரா, கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ஸ்க்ரீன் ப்ரொடெக்ஷன், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யு.ஐ-7 போன்ற ஹைஎண்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது.சாம்சங் கேலக்ஸி எஸ்-25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் ஏற்கனவே உலகளவில் தொடங்கிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் 23-ம் தேதி முதல் உலகளாவிய ஸ்டோர்களில் $1,099.99-க்கு (அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.94,000) என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம்.6.7-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (சில நாடுகளில் எக்ஸினோஸ் மாறுபாடு இருக்கலாம்), 12GB LPDDR5x, 256GB/512GB UFS 4.0. சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது. டைட்டானியம் ஐசி ப்ளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.சாம்சங் இந்த மாடலை குறிப்பாக 20 மற்றும் 30 வயதுடைய வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, சிறியரக மற்றும் அதிக செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் மே 23 முதல் தென் கொரியா, மே 30 முதல் அமெரிக்கா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது