சினிமா
” சூரி கூட நடிக்க ஓகேவா என கேக்குறாங்க..!” பதிலடி கொடுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

” சூரி கூட நடிக்க ஓகேவா என கேக்குறாங்க..!” பதிலடி கொடுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள “மாமன்” படம் வருகிற 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்நிலையில் “மாமன்” படத்தின் ப்ரோமோஷன் தற்போது கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி சூரி குறித்து பேசியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும் அவர் சூரிக்கு நன்றியையும் அந்த மேடையில் தெரிவித்துள்ளார்.குறித்த நிகழ்வில் அவர் “நிறைய பேர் என்கிட்ட உங்களுக்கு சூரி கூட நடிக்க ஓகேவா என்று கேட்டாங்க. ஏன் இப்படி கேக்குறீங்க என்று நான் அவர்களிடம் கேட்டேன். சூரி சாருடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஏனென்றால் அவர் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். அவர் ரொம்ப நேர்மையான மனுஷன். அவர் பண்ற ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை இருக்கு. அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையிலும் மரியாதை, அன்பு இருக்கு. அதனால் அவருடன் நடிப்பதில் பெருமைதான். உங்க கூட நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சூரி சார்” என சிறந்த பதிலடி கொடுத்துள்ளார்.