Connect with us

உலகம்

ஜப்பானின் நிசான் மோட்டார் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது!

Published

on

Loading

ஜப்பானின் நிசான் மோட்டார் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது!

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார், ஏற்கனவே பல கட்டமாக செலவின குறைப்பு, பணிநீக்கம் செய்துள்ள நிலையில் தற்போது புதிதாக தனது உலகளவிய வர்த்தகத்தில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்த 11,000 ஊழியர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிசான் மொத்தமாக 30,000 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

Advertisement

நிசான் ஏற்கனவே 20,000 ஊழியர்கள் அதாவது இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 15% குறைக்க திட்டமிட்டு இருந்த வேளையில் தற்போது 11,000 பேரை புதிதாக நீக்கவுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பணிநீக்க அறிவிப்பை ஜப்பான் நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. நிசானும் ஹோண்டாவும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்த பின்பு எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கையாக இதை பார்க்கப்படுகிறது.

நிசான் மோட்டாரின் இந்த 30,000 ஊழியர்கள் முடிவு, நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கடந்த மாதம், நிசான் மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில் 700-750 பில்லியன் யென் (4.74-5.08 பில்லியன் டாலர்) நிகர நஷ்டத்தை எதிர்பார்ப்பதாக முதலீட்டாளர்களுக்கு முன் கணிப்பை வெளியிட்டது.

இந்த நஷ்டம், நிறுவனத்தின் மதிப்பு குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்த இழப்பை சமாளிக்கவே அடுத்த காலாண்டில் அல்லது நிதியாண்டில் இலாபகரமாக மாற திட்டமிட்டு இந்த 30,000 பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது நிசான். 

 ஜாப்பான் நாட்டின் இரு மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மற்றும் ஹோண்டா, டிசம்பர் 2024 இல் தங்கள் வர்த்தகம் மற்றும் உற்பத்தி தளங்களை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருந்தன. இந்த இணைப்பு, உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரை உருவாக்கும் மாபெரும் இலக்கை கொண்டிருந்தது.

Advertisement

ஆனால், ஆரம்பம் முதலே இந்த இணைப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தன, இறுதியில் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முடிவு, ஜப்பான் வாகனத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஏனெனில் இணைப்பு நடந்திருந்தால், இரு நிறுவனங்களும் சீன எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போட்டிப்போடும் வல்லமையை பெற்று இருக்கும்.

நிசானின் தற்போதைய நெருக்கடி, உலகளாவிய வாகன சந்தையில் ஜப்பான் நிறுவனங்களின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது. மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு தேவையான முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை நிசானுக்கு பெரும் சவாலாக உள்ளன. 

Advertisement

 மேலும், சீனாவில் உள்ளூர் நிறுவனங்களுடனான போட்டி, அமெரிக்க சந்தையில் குறைந்த விற்பனை, மற்றும் உயரும் மூலப்பொருள் செலவுகள் ஆகியவை நிசானின் இலாபத்தை குறைத்துள்ளன. இந்த சூழலில் தான் வேறு வழியே இல்லாமல், 30,000 பேரை பணிநீக்கம் செய்து நிறுவனத்தின் செலவு குறைத்து நீண்டகால வளர்ச்சிக்கு தரமான கார்களை கொண்டுவரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1746915357.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன