பொழுதுபோக்கு
ஜீ தமிழ் சீரியலை கைவிட்டது இதற்குதானா? சன் டிவி சீரியலில் என்ட்ரி ஆன புது நடிகை!

ஜீ தமிழ் சீரியலை கைவிட்டது இதற்குதானா? சன் டிவி சீரியலில் என்ட்ரி ஆன புது நடிகை!
ஜீ தமிழின் கார்திகை தீபம் சீரியலில் நடித்து வந்த நடிகை அர்த்திகா, திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது சன் டிவியின் புதிய சீரியலில் நாயகியாக களமிறங்கியுள்ளார். இந்த சீரியலின் ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் நாயகனாக நடிக்க, நாயகியாக அர்த்திகா நடித்மது வந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியலில் அர்த்திகா 2 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் இவரது கேரக்டர் முடிவுக்கு வருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில், இவர் இறந்துவிடுவது போல் காட்டப்பட்டது.அர்த்திகா இந்த சீரியலில் இருநது விலகியதால், இவர் இறந்துவிடுவது போல் காட்சி அமைக்கப்பட்டு, கதைக்களம் நகரத்து பின்னணியில் இருந்து தற்போது கிராமத்து பின்னணிக்கு மாறி, கார்த்தி தனது மாமா மகளை திருமணம் செய்துகொள்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதே சமயம் கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகிய அர்த்திகா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சில மாத இடைவெளிக்கு பிறகு சன் டிவியின் புதிய சீரியலில் அர்த்திகா நாயகியாக நடித்து வருகிறார்.சின்னத்திரையில் சீரியல்களில் முத்திரை பதித்து வரும் சன் டிவி சமீப காலமாக புதிய சீரியல்களை அதிகளவில் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் விரைவில் வினோதினி என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளது. இந்த சீரியலில் தான் அர்த்திகா நாயகியாக நடித்து வருகிறார். வழக்கம்போல், குடும்பத்தை பாதுகாக்கும் ஒரு பெண்ணின் கதையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், 10 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு போன கணவருக்காக காத்திருக்கும் ஒரு பெண்தான் வினோதினி.இந்த சீரியலின் ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எல்லா சீரியலும் போக போக வன்மம் வக்கிரம் அடிப்படையாக கொண்டுதான் திரைக்கதை அமைக்கப்பட்டு வருவதாக பதிவிட்டு வருகின்றனர்.