Connect with us

பொழுதுபோக்கு

தெருவை காணவில்லை; நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன்; ஜி.பி.முத்து எச்சரிக்கை புகார்!

Published

on

GP Muthu Wife

Loading

தெருவை காணவில்லை; நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன்; ஜி.பி.முத்து எச்சரிக்கை புகார்!

சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக வலம் வரும் ஜி.பி.முத்து, யூடிபூப் சேனலிகளில் வீடியோக்கள் வெளியிடுவது மட்டுமல்லாமல், சின்னத்திரையில், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனிடையே தற்போது இவர் தனது வீட்டில் அருகில் இருந்த தெருவை காணவில்லை என புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமூகவலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த இவர், தனது பேச்சுவழக்கின் மூலம், நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு கட்டத்தில் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், யூடியூப் சேனலிகளில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். சமூகவலைதளங்களில் இவருக்கான ஃபாலோர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இதன் மூலம் சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்பினை பெற்றார்.தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய ஜி.பி.முத்து, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். ஆனாலும், நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறிய இவர், தனது குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு இவருக்கு சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கியது.துணிவு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜி.பி.முத்து தற்போது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், இன்று தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த மனுவில், ‘உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233-ல் கீழ தெரு இருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம். பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 20 வருடத்தில் அந்த தெரு காணாமல் போய்விட்டது.சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனது போன்று, இந்த தெருவும் காணாமல் போய்விட்டது. அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால், பொதுமக்களின் பாதை அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடன்குடி பெருமாள் புரத்தில் காணாமல் போன கீழதெருவை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.கலெக்டர் அலுவலகம் முன்பு  ஜி.பி.முத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “கோயில் சொத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கு அதைத்தான் விற்றிருக்கிறார்கள். அதோடு சேர்த்து, எனக்கு சொந்தமான பாதையையும் அடைத்துவிட்டார்கள். தனது சொந்த பகை காரணமாக ஒரு தனி நபர், அவரது குடும்பத்தினடன் சேர்த்து அராஜகம் செய்கிறார். ஏனென்று கேட்டால் என்னையும் மிரட்டுகிறார்கள். அடுத்த முறை நான் இங்கு மண்ணெண்ணெய்யோடுதான் வருவேன்” என்று பேசியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன