சினிமா
நேசிப்பாயா நடிகையின் நியூ லுக்..! அழகினால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அதிதி..!

நேசிப்பாயா நடிகையின் நியூ லுக்..! அழகினால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அதிதி..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார் அதிதி சங்கர். பிரமாண்டமான இயக்குநர் மற்றும் தந்தையாக விளங்குகின்ற சங்கரை பெருமைப்படுத்தும் வகையில், அதிதி தற்போது திரையுலகில் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றார்.’விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி, அதன் பின்பு ‘நேசிப்பாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது அழகு, எளிமை மற்றும் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.சமீபத்தில் தனது அதிகார பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி சங்கர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், ஸ்டைலிஷாகவும் அழகாகவும் அதிதி போஸ் கொடுத்துள்ளார். அதிதி தற்போது சில முக்கியமான புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் சில திரைப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.