Connect with us

இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

Published

on

Loading

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன்(வயது 30), வசந்தகுமார்(32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுசதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிர்தல் உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இவர்கள் மீது 2019ம் ஆண்டு மே 21ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது.

Advertisement

அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 24ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். 

Advertisement

மேலும் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. 

தீர்ப்பையொட்டி கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் தண்டனை வழங்கும்போது வயதை கருத்தில் கொள்ள வேண்டுமென குற்றவாளிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1747167995.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன