Connect with us

சினிமா

ரூ. 12,000 கோடி போச்சி!! நடிகை அசின் கணவர் தொழிலில் ஏற்பட்ட இழப்பு.. ஆனா இப்போ…

Published

on

Loading

ரூ. 12,000 கோடி போச்சி!! நடிகை அசின் கணவர் தொழிலில் ஏற்பட்ட இழப்பு.. ஆனா இப்போ…

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அசின். கமல், சூர்யா, விக்ரம், விஜய், அஜித், ஜெயம்ரவி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த அசின். பிஸியான ஹீரோயினாக திகழ்ந்து வந்த அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்துக்கொண்டார்.இந்நிலையில் அசினின் கணவர் ராகுல் அளித்த பேட்டியொன்றில், எங்கள் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் உலகத்திலேயே முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. நோக்கியா, சாம்சங் நிறுவனங்களின் போட்டியை இந்தியாவில் வெற்றியை எதிர்கொண்டு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியது.அந்நிலையில் தான் சீன நிறுவனங்களின் வருகையால் எங்கள் நிலைமை மாறியது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் பவுன்சர்கள் தொடர்ந்து வந்தப்பின் க்ளீன் போல்ட் ஆகிவிட்டோம். மைக்ரோமேக்ஸுக்கு மட்டும் இது நடிக்காமல் உலகளவில் இது நடந்தது.சீன நிறுவனங்கள் சீன உற்பத்தியாளர்களிடம் மட்டுமே ஒப்பந்தம் செய்ததால் புதிய பரிசோதனைகளுக்கு வாய்ப்பில்லாமல் போனது, இருந்தும் இரு ஆண்டுகள் முயற்சி செய்தும் முதலீடு செய்தால் எந்த அர்த்தமும் இல்லை என தோன்றியதாலும் போட்டியாளர்களுக்கு இதனால் நிதி அதிகளவில் கிடைத்தது. இதனால் பணத்தை வீணாக்கக்கூடாது என்று உணர்ந்துவிட்டோம்.2014ல் எங்களுக்கு வந்த 800 மில்லியன் டாலர் நிதியுதவியை நிராகரித்தது தவறாக இருந்தாலும் பின்லாந்து, கொரிய நிறுவனங்களைத்தான் எதிர்கொண்டோம். சீன நிறுவனங்களால் முடியாது என்றுதான் நினைத்தோம். ஆனால் அந்த நிறுவனங்கள் முழு பலத்துடன் இருந்தார்கள். பின் நாங்கள் கட்டுமான துறைக்கு மாறி, முன்பைவிட இப்போது அதிகம் சம்பாதித்து வருவது பலருக்கும் தெரியாது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன