சினிமா
32 வயதில் சினிமாவுக்கு குட்பாய்!! ரூ. 600 கோடி சொத்தை உதறித்தள்ளிய பிரபல நடிகை..

32 வயதில் சினிமாவுக்கு குட்பாய்!! ரூ. 600 கோடி சொத்தை உதறித்தள்ளிய பிரபல நடிகை..
பிரபல நடிகை ஒருவர் தனக்கு வந்த சுமார் ரூ. 600 கோடி சொத்துக்களை வேண்டாம் என்று உதறி தள்ளியுள்ள சம்பவம் நடந்துள்ளது. 90ஸ் காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ப்ரீத்தி ஜிந்தா தான் அந்த நடிகை. தில் சே படத்தின் மூலம் அறிமுகமாகிய ப்ரீத்தி ஜிந்தா, அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தினை பிடித்தார்.கடும் போட்டிகளுக்கு மத்தியில் அதிகம் பேசப்பட்ட நடிகையாக திகழ்ந்தார். ஆனால் தன்னுடைய 43 வயதிலேயே சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார். இவ்வளவு பிரபலமாக இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, தனக்கு கிடைத்த ரூ. 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வேண்டாம் என்று நிராகரித்த சம்பவம் நடந்துள்ளது.இந்தி சினிமா தயாரிப்பாளர் ஷாந்தர் அம்ரோஹி ப்ரித்தி ஜிந்தாவை தன் மகளைப்போன்று பார்த்துக்கொண்டார். 2011ல் அவர் உயிரிழப்பிற்கு முன் அவருக்கு சொந்தமான ரூ. 600 கோடி சொத்தை ப்ரீத்தி ஜிந்தா பெயரில் மாற்ற அம்ரோஹி முன்வந்துள்ளார். அதற்கு காரணம் தன்னுடைய குழந்தைகளைவிட ப்ரீத்தி ஜிந்தா அவர்மீது காட்டிய அக்கறைதான். சகோதர்களுடன் சண்டையிட்டபோது அம்ரோஹிக்கு ஆதரவாக ப்ரீத்தி ஜிந்தா இருந்தார்.இது போன்ற காரணங்களால் தன் சொத்து ரூ. 600 கோடியை சொந்த குழந்தைகளுக்கு கூட கொடுக்காமல் ப்ரீத்தி ஜிந்தா பெயர்ல் எழுதி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் அம்ரோஹி. ஆனால் இந்த சொத்துக்களை ப்ரீத்தி ஜிந்தா ஏற்கமறுத்துவிட்டா. மேலும் தனக்கு அந்த சொத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்றும் தெளிவாக கூறிவிட்டார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.