சினிமா
90’ஸ் குயின் ரீ-என்ட்ரி.! “டூரிஸ்ட் பாமிலி” வெற்றி விழாவில் ரசிகர்களை நெகிழ வைத்த சிம்ரன்!

90’ஸ் குயின் ரீ-என்ட்ரி.! “டூரிஸ்ட் பாமிலி” வெற்றி விழாவில் ரசிகர்களை நெகிழ வைத்த சிம்ரன்!
தமிழ் சினிமாவில் சிறப்பான அழகுடன் விளங்குகின்ற நடிகை சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் ‘டூரிஸ்ட் பாமிலி’. இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சிம்ரன், ரசிகர்களின் கண்களில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்.விழாவின் போது சிம்ரன் தெரிவித்ததாவது,”நான் ‘டூரிஸ்ட் பாமிலி’ கதையை முதலில் Zoom மூலம் கேட்டேன். ஆனாலும், கதை என்னைக் கவர்ந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பேசிய பாணியில் ஒரு உற்சாகம் இருந்தது. அவருடைய திரைக்கதையைக் கேட்ட பிறகு உடனே நான் இதை பண்ணுறேன் என்று சொல்லிட்டேன்.” என்றார்.சிம்ரன் மேலும், “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு, இப்படியொரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்தப் படம் மூலம் திரையுலகிற்கு நான் மீண்டும் கம்பேக் கொடுத்தது போல இருந்தது.” என்று உணர்ச்சி பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.