சினிமா
” கேங்கர்ஸ்” படத்தால் தவிடு பொடியாகிய சுந்தர்.சியின் எதிர்பார்ப்பு..! நடந்தது என்ன.?

” கேங்கர்ஸ்” படத்தால் தவிடு பொடியாகிய சுந்தர்.சியின் எதிர்பார்ப்பு..! நடந்தது என்ன.?
தமிழ் சினிமாவில் வெற்றித் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் எனப் பல பரிமாணங்களில் தனது தனித்துவத்தை நிரூபித்தவர் சுந்தர்.சி. இவர் ‘அரண்மனை’ போன்ற ஹாரர் காமெடி படங்களால் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார். ஆனால் சமீப காலமாக அவரது திரைப்படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதனை தற்பொழுது வெளியான தகவல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. சுந்தர்.சி நடிப்பில் வெளியான ‘கேங்கர்ஸ்’ திரைப்படம், ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாம் வாரங்கள் முடிந்தும் கூட இப்படம் தமிழகத்தில் 11 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சுந்தர் .சி மற்றும் வடிவேலு போன்ற காமெடி கிங்ஸுடன் இணைந்த Comboவில் உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிகளவான எதிர்பார்ப்புக் காணப்பட்டது. எனினும் படம் வெளியான பிறகு ரசிகர்கள் அப்படத்தினை பெரிதும் விரும்பவில்லை. இதனாலேயே படம் வசூல் ரீதியில் தோல்வியை சந்தித்துள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் முன்னர் உருவான மதகதராஜா , அரண்மனை போன்ற படங்கள் சிறந்த வசூலைப் பெற்றுக் கொண்டன. அந்தவகையில் தற்பொழுது வெளியான வடிவேலுவின் படம் அந்த இயக்குநரின் எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையில் காணப்பட்டதாக சிலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.