இலங்கை
கொத்மலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

கொத்மலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
ரம்பொட – கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்து, கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.