Connect with us

சினிமா

“கோவிந்தா” பாடல் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த சந்தானம்..! இன்ஸ்டாவில் வைரலாகும் கருத்துக்கள்

Published

on

Loading

“கோவிந்தா” பாடல் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த சந்தானம்..! இன்ஸ்டாவில் வைரலாகும் கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சந்தானம் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் அதிகளவான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். இவர் தற்போது ஹீரோவாக தன்னை நிலைநாட்டி வருகின்றார். இதற்கிடையே, சமீபத்தில் அவரது ” DD Next Level” படத்தின் “கோவிந்தா கோவிந்தா..” பாடல் மீது சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.அந்தப் பாடலில் இந்துக்களை அவமதிப்பது போல கூறியிருப்பதால் சிலர் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். இதனால், பலர் “கோவிந்தா..” பாடலை பயன்படுத்தியதற்காக நடிகர் ஆர்யா பதில் கூறவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.இந்த விவகாரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது நடிகர் சந்தானம் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இதுகுறித்து சந்தானம் கூறியதாவது, “நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க. பார்க்கிறவங்க எல்லாரும் அவங்களுடைய கருத்துக்களை சொல்லுவாங்க. கோர்ட் என்ன சொல்கிறது என்பதையே நான் கேட்பேன். போறவங்க, வாறவங்க எல்லாம் சொல்வதைக் கேட்டால் வாழ்க்கையே போய்விடும்.” எனக் கூறியிருந்தார்.இந்தக்  கருத்தின் மூலம் சந்தானம் நீதிமன்றம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தெரியவந்துள்ளது. இப்போதைக்கு, கோவிந்தா பாடல் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்து விடவில்லை என்றாலும், சந்தானம் கோர்ட் சொல்லும் வார்த்தைக்காக காத்திருக்கின்றார் என்பதை அவரது கருத்துக்களின் மூலம் அறிய முடிகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன