இலங்கை
பளை ரயில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

பளை ரயில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
பளை, கச்சார்வெளியில் நேற்றுமுன்தினம்காலை நடந்த ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பளை, தம்பகாமத்தைச் சேர்ந்த அருளானந்தம் பிரபாகரன் (வயது-43) என்பவரே உயிரிழந்தவராவார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணகள் பளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.