பொழுதுபோக்கு
ஃபேமிலி மேன் டைரக்டருடன் சமந்தா காதல்? சர்ச்சையில் சிக்கிய போட்டோஸ்: இயக்குனரின் மனைவி ரகசிய பதிவு!

ஃபேமிலி மேன் டைரக்டருடன் சமந்தா காதல்? சர்ச்சையில் சிக்கிய போட்டோஸ்: இயக்குனரின் மனைவி ரகசிய பதிவு!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சமந்தா, தனது நடிப்பின் மூலம் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களில் இருவரும் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர்.ஆங்கிலத்தில் படிக்க: After Samantha Ruth Prabhu shares cosy photos with Raj Nidimoru, his wife Shhyamali pens a cryptic note: ‘I send blessings and love…’குறிப்பாக ஒரு புகைப்படத்தில், சமந்தா விமானத்தில் ராஜ் நிடிமோருவின் தோளில் சாய்ந்து உறங்குவது போல இருந்தது. இந்த புகைப்படங்களை பகிர்ந்த சமந்தா, தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலலா மூவிங் பிக்சர்ஸ்’ தயாரித்த முதல் படமான ‘சுபம்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த பதிவை வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தார். “எங்கள் முதல் அடி – இதயம், பைத்தியக்காரத்தனம் மற்றும் புதிய, வித்தியாசமான கதைகள் முக்கியம் என்ற நம்பிக்கையால் தூண்டப்பட்டது! நாங்கள் சுபத்துடன், பயணம் தொடங்கிவிட்டது. என்ன ஒரு ஆரம்பம்!” என்று அவர் பதிவிட்டிருந்தார்.சமந்தாவின் இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. பல ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஒரு ரசிகர், “8வது ஸ்லைடு சாம்! உங்கள் காதல் கதை ட்ரெண்டாகப் போகிறது!” என்று கமெண்ட் செய்தார். மற்றொருவர், “இது அதிகாரப்பூர்வமானது! ராஜும் சாமும் காதலிக்கிறார்கள்” என்று பதிவிட்டார்.மேலும் சிலர், “சந்தோஷமாக இருங்கள் சாம், உங்களை மதிக்கும் சரியான நபரை நீங்கள் இறுதியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்”, “சமந்தாவுடன் ராஜ்”, “நான்காவது ஸ்லைடில், அந்த மனிதன் சாம்மை பார்க்கும் விதம்”, “8வது ஸ்லைடு? அது உண்மையாக இருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் மீண்டும் இழந்துவிட்டீர்கள் மேடம்”, “உங்களுக்கு இருவருக்கும் சாம்ராஜ் புதிய பெயர்”, மற்றும் “நீங்கள் ராஜுடன் உறவில் இருக்கிறீர்களா” போன்ற கேள்விகளையும் கருத்துகளையும் பதிவிட்டனர்.சமந்தாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே, ராஜ் நிடிமோருவின் மனைவி ஷ்யாமலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மர்மமான பதிவை வெளியிட்டார். அதில், “என்னை நினைப்பவர்கள், பார்ப்பவர்கள், கேட்பவர்கள், என்னைப் பற்றி கேள்விப்படுபவர்கள், என்னிடம் பேசுபவர்கள், என்னைப் பற்றி பேசுபவர்கள், என்னைப் பற்றி படிப்பவர்கள், என்னைப் பற்றி எழுதுபவர்கள் மற்றும் இன்று என்னை சந்திப்பவர்கள் அனைவருக்கும் எனது ஆசீர்வாதங்களையும் அன்பையும் அனுப்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.A post shared by Samantha (@samantharuthprabhuoffl)ஷ்யாமலியின் இந்த பதிவு மேலும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவும் இயக்குனர் ராஜ் மற்றும் டிகேவும் இதற்கு முன்பு ‘தி ஃபேமிலி மேன்’ 2-ம் பாகத்தில் இணைந்தனர். சமீபத்தில் வெளியான ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ தொடரிலும் இணைந்து பணியாற்றியுள்ளனர். ராஜ் நிடிமோரு அடிக்கடி சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் காணப்பட்டாலும், இந்த காதல் வதந்திகள் குறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையே, ஷ்யாமலி கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியும் இதேபோன்ற ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அவர் கடைசியாக தனது கணவர் ராஜுடன் 2023ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், “நான் பிடிக்க விரும்பும் ஒரு கை, நான் பார்க்க விரும்பும் ஒரு முகம், நான் கேட்க விரும்பும் ஒரு குரல் எனக்கு உலகம் போன்றது… என் வாழ்க்கையின் மையத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்களும் நாம் பகிர்ந்து கொள்ளும் அன்பும் தான். நான் என் ஆசீர்வாதங்களை எண்ணும்போது, எப்போதும் உன்னைப் பற்றி நினைக்கிறேன்! இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ஆர்!” என்று குறிப்பிட்டிருந்தார்.A post shared by Shhyamali De (@shhyamalide)இயக்குனர் ராஜ் நிடிமோரு 2015ஆம் ஆண்டு ஷ்யாமலியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இதனிடையே, சமந்தா இதற்கு முன்பு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துள்ளார். தற்போது சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் இடையே காதல் இருப்பதாக பரவும் வதந்திகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நெருக்கமான புகைப்படங்கள் நட்பு ரீதியிலானவையா அல்லது உண்மையில் காதலா என்பது குறித்து கேள்விகள் அதிகரித்துள்ளது.