பொழுதுபோக்கு
அம்மாவை அவமானப்படுத்த இந்த தொழில் செய்தேன்; என் உயிரை காப்பாற்றியது பாலச்சந்தர்: மனம் திறந்த கமல்ஹாசன்

அம்மாவை அவமானப்படுத்த இந்த தொழில் செய்தேன்; என் உயிரை காப்பாற்றியது பாலச்சந்தர்: மனம் திறந்த கமல்ஹாசன்
தனது இளமைக்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள பன்முகத் திறமையாளரான கமல்ஹாசன், தனக்கு எந்த ஒரு வழக்கமான வேலைகளை செய்வதற்கான திறன்கள் இல்லாததால், தனது தாயை வேண்டுமென்றே ‘அவமானப்படுத்த’ முடிதிருத்தும் தொழிலை மேற்கொண்டதாக அவர் கூறினார். ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் கே. பாலச்சந்தரின் தாக்கம் மற்றும் அவர் வழங்கிய விலைமதிப்பற்ற அறிவுரைகள் குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.ஆங்கிலத்தில் படிக்க: Kamal Haasan worked as a barber to ‘insult’ his mother, says he would’ve died penniless in an auto rickshaw had he not heeded guru’s adviceதனது ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் மனக்குமுறல்கள் குறித்து பேசிய கமல், “பாலச்சந்தர் சார்தான் எனக்கு சரியான குரு என்று சொன்னவர் இன்னொரு குரு. அவர் ஒரு முடிதிருத்துனர். அவர்தான் எனக்கு முடிவெட்ட கற்றுக்கொடுத்தார். நான் ஒரு சலூனில் வேலை பார்த்தேன். ஆனால் அது பெரும்பாலும் என் அம்மாவை வெறுப்பேற்றுவதற்காகத்தான். நான் சும்மாதான் இருக்கிறேன் என்று அவர் நினைத்தார். நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன், சினிமா பார்ப்பேன். இது சரியில்லை என்று அவர் சொன்னார்.என்னிடம் இருந்த திறமைக்கு எனக்கு எளிதாக வேலை கிடைக்கவில்லை. என் அம்மாவை எப்படி அவமானப்படுத்துவது என்று யோசித்தேன். அதனால்தான் நான் முடிதிருத்துனரானேன். பாலச்சந்தர் இந்த கதையால் ஈர்க்கப்பட்டு, தனது ‘ஜரா சி ஜிந்தகி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் இதனை பயன்படுத்தியதாக கமல் கூறினார். 19 வயதில் தான் ஒரு இயக்குனராக விரும்பியதாக பாலச்சந்தரிடம் கூறியபோது, அவர் அந்த எண்ணத்தை கடுமையாக விமர்சனம், செய்ததாகவும் கமல் நினைவு கூர்ந்தார். ஒருவேளை தான் இயக்குனராகியிருந்தால் ஆட்டோ ரிக்ஷாக்களில் தான் வாழ்க்கை முழுவதும் பயணம் செய்திருக்க நேரிட்டிருக்கும் என்று பாலச்சந்தர் அப்போது கூறினார். தான் ஒரு திரைப்பட நட்சத்திரமாக வருவதற்குரிய தகுதிகள் இருப்பதாக முதன்முதலில் கூறியதும் அவர்தான் என்றும் கமல் தெரிவித்தார். “நான் ஆட்டோ ரிக்ஷாவில் போவதை விடுங்கள், அவர் சொன்னதை கேட்காமல் போயிருந்தால் ஒருவேளை நான் அதில் இறந்திருப்பேன்” என்று கமல் கூறினார்.திரைப்படத்துறையின் ஜாம்பவானான கமல், தன்னை விட திறமையான பல நண்பர்கள் சோகமான முறையில் உயிரிழந்ததை பார்த்ததாக கூறினார்.”அவர்கள் தெருக்களில் இறந்தார்கள்” என்று பாலச்சந்தர் தனக்கு வழங்கிய அறிவுரையை நினைவு கூர்ந்தார். “அதனால்தான் நான் முழுமையாக நடிப்பில் இறங்கினேன். அந்த தவறை நான் செய்திருந்தால், அவர் சொன்னது சரியாகியிருக்கும். என் நண்பர்கள் பலர் அப்படி இறந்திருக்கிறார்கள். அதனால்தான் நான் பாலச்சந்தர் சாருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இல்லையென்றால் நானும் அந்த வழியில் போயிருப்பேன்.என் மனக்குமுறல்களுடனும், நிறைவேறாத கனவுகளுடனும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இறந்திருப்பேன். அந்த ஆட்டோவில் ஒரு பிணம் கிடக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்காது” என்று கமல் உருக்கமாக கூறினார். கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவர். அவர் அடுத்ததாக தனது நீண்டகால நண்பரும், புகழ்பெற்ற இயக்குனருமான மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.