வணிகம்
‘இந்தியாவில் ஐபோன் உற்பத்தி நடைபெறுவதை நான் விரும்பவில்லை’; ஆப்பிள் நிறுவனத்திற்கு டிரம்ப் அறிவுறுத்தல்

‘இந்தியாவில் ஐபோன் உற்பத்தி நடைபெறுவதை நான் விரும்பவில்லை’; ஆப்பிள் நிறுவனத்திற்கு டிரம்ப் அறிவுறுத்தல்
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன விரிவாக்கம் குறித்து டிரம்ப்: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், அந்நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய வேண்டாம் என்று கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக உள்நாட்டு சந்தையை பூர்த்தி செய்ய மட்டுமே உற்பத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா “அனைத்து வரிகளையும் நீக்க முன்வந்ததாகவும்” அவர் கூறினார். அமெரிக்கா மற்றும் கத்தார் வணிகத் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், “நேற்று, டிம் குக்குடன் எனக்கு ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. நான் அவரிடம், ‘டிம், நீங்கள் என் நண்பர். நான் உங்களுக்கு மிகவும் நன்றாக உதவி செய்துள்ளேன். நீங்கள் 500 பில்லியன் டாலர் அறிவிப்புடன் இங்கு (அமெரிக்காவில்) வருகிறீர்கள். இப்போது நீங்கள் இந்தியா முழுவதும் உற்பத்தி செய்வதாக கேள்விப்படுகிறேன். இந்தியாவில் நீங்கள் உற்பத்தி செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் இந்தியாவைப் பார்த்துக் கொள்ள விரும்பினால் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம். ஏனெனில் இந்தியா உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும்’ என்று கூறினேன்,” என்றார். டிரம்ப்பின் கருத்து ஏன் முக்கியமானது?சீனா தொடர்பான வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை ஜூன் காலாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குக் உறுதிப்படுத்திய நேரத்தில் ட்ரம்ப்பின் கருத்துகள் வந்துள்ளன. இதுவரை நிறுவனத்தின் உற்பத்தித் திறனின் முக்கிய மையமாக இருந்த சீனாவிலிருந்து படிப்படியாக விலகி, அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து ஐபோன் உற்பத்தியில் கால் பகுதியை இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் விரும்புகிறது.இந்த மாத தொடக்கத்தில் நிறுவனத்தின் நிதி முடிவுகளை அறிவித்த பிறகு முதலீட்டாளர்களுடனான அழைப்பின் போது குக் இந்த கருத்தை தெரிவித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது – வரி விகிதங்கள் குறித்து அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆரம்பத்தில் அதிகரித்த பதற்றத்திற்குப் பிறகு, இருவரும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்.அமெரிக்கா, சீனப் பொருட்களின் மீது 145 சதவீதம் வரிகளை விதித்ததை அடுத்து, அமெரிக்க நுகர்வோர்கள் இந்திய சப்ளையர்களை நோக்கித் திரும்பியதால், அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதற்றங்கள் இந்தியாவிற்கு சாதகமாக மாறிய நேரத்தில் இது வந்துள்ளது. சீனாவில் கணிசமாக அதிக வரி விகிதங்கள் காரணமாக, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை விரைவுபடுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அங்கு ஆப்பிள் ஒரு பெரிய அசெம்பிளி தளத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா – சீனா உறவுகளில் ஏதேனும் சுமூகமான நிலை ஏற்பட்டால், இந்தியாவுக்கு எதிர்பார்க்கப்படும் சப்ளை சங்கிலிகளின் இடம்பெயர்வுக்கு சவாலாக இருக்கும்.அமெரிக்கா – சீனா வர்த்தக போர் நிறுத்தம் இந்திய இலக்குகளை பாதிக்குமா?இருப்பினும், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போர் நிறுத்தத்தைப் பற்றி இந்திய அரசு தற்போது கவலைப்படவில்லை. ஏனெனில், ஆப்பிள் இந்தியாவின் இடம்பெயர்வு எந்தவொரு வரி தொடர்பான அழுத்தத்தாலும் தூண்டப்படவில்லை என்றும், மாறாக மின்னணு பொருட்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான புது டெல்லியின் வளர்ந்து வரும் லட்சியத்தின் காரணமாக 2020-க்கு முன்பே நிகழ்ந்தது என்றும் நம்புகிறது.அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பெய்ஜிங்கிற்கு வரி முன்னணியில் குறிப்பிடத்தக்க நிவாரணம் அளித்தால், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் சப்ளை சங்கிலிகள் எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாக இல்லை. மின்னணு துறையில் சீனாவின் தொழில்நுட்பத் திறனும், திறமையான மனித வளமும் பொதுவாக இந்தியாவின் திறனை விட கணிசமாக சிறந்ததாக கருதப்படுகிறது.இருப்பினும், அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேம்படும் வர்த்தக உறவு புது டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு நல்ல செய்தி அல்ல என்பது தெளிவாகிறது.ஸ்மார்ட்போன் உற்பத்திக்கு இந்திய அரசு அதன் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை அறிவித்த பின்னர், 2020 இல் இந்தியாவில் உற்பத்தியை ஆப்பிள் இரட்டிப்பாக்கியது. இதன் கீழ் அதன் கூடுதல் விற்பனையின் அளவைப் பொறுத்து உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. அந்நிறுவனம் இந்தியாவில் அதன் பழைய ஐபோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் தொடங்கியது. இன்று உலகளாவிய நுகர்வுக்காக உயர்நிலை ப்ரோ வரிசை உட்பட அனைத்து மாடல்களையும் உற்பத்தி செய்கிறது.ஆப்பிள், அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம், இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக உள்ளது. இது சீனாவிலிருந்து சில உற்பத்தியை அகற்ற உதவியது. அந்நிறுவனம் இங்கு மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்களுடன் தொடங்கியது. அவை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகும். இதில், பிந்தைய இரண்டு நிறுவனங்களும் இப்போது டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.இந்திய மானியங்களின் முக்கிய பயனாளியாக விளங்கும் ஆப்பிள்:ஸ்மார்ட்போன்களுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி நிறுவனங்கள், மிகப்பெரிய பயனாளிகளாக இருந்துள்ளனர். 2022-23 முதல் 2024-25 வரையிலான மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் சுமார் 1 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது என்றும், ஆப்பிளின் மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்களும் மொத்தமாக 75 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளனர் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகாட்ரான் (சமீபத்தில் டாடாக்களால் வாங்கப்பட்டது) ஆகியோர் மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ. 6,600 கோடி பெற்றுள்ளனர்.2023-24 இல், உலகளவில் ஆப்பிளின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான், ஆண்டின் அதிகபட்சமாக ரூ. 2,450 கோடி மானியத்தை பெற்றது. இருப்பினும், 2024-25 இல், ஃபாக்ஸ்கானுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை என்று தரவு காட்டியது. 2024-25 இல், சாம்சங் அதிகபட்சமாக சுமார் ரூ. 958 கோடி மானியத்தைப் பெற்றது.