பொழுதுபோக்கு
காட்டில் தொலைந்துபோன ‘தக் லைப்’ படக்குழு: காப்பாற்றி அழைத்து வந்தது யார்? கமல் சொன்ன உண்மை சம்பவம்!

காட்டில் தொலைந்துபோன ‘தக் லைப்’ படக்குழு: காப்பாற்றி அழைத்து வந்தது யார்? கமல் சொன்ன உண்மை சம்பவம்!
பன்முகத் திறமையாளரான நடிகர்-இயக்குனர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னத்துடனான தனது நீண்டகாலத் தொடர்பையும், அவர்கள் இருவரும் சுமார் 4 தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் இணைதுள்ள ‘தக் லைப்’ திரைப்படம் குறித்தும் சமீபத்தில் மனம் திறந்து பேசி வருகின்றனர். அந்த வகையில், ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், மணிரத்னத்தின் அர்ப்பணிப்பு மற்றும் சில நேரங்களில் கடுமையானதாகத் தோன்றும் வேலைப்பாணி குறித்து கமல் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.ஆங்கிலத்தில் படிக்க: Mani Ratnam made Kamal Haasan trek 30 miles to world’s third-largest waterfall; they got lost in the jungle, crew fainted: ‘I had to carry Shruti’கொடைக்கானலில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது உயரமான அருவியின் அடிவாரத்தில் ஒரு காட்சியைப் படமாக்க மணிரத்னம் விரும்பியதாக கமல் கூறினார். இதற்காக, கமல்ஹாசன், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், கலை இயக்குனர் சாபு சிரில், கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன், சண்டை பயிற்சியாளர் விக்ரம் தர்மா மற்றும் மூன்று உதவி இயக்குனர்கள் அடங்கிய குழு அதிகாலை 7 மணிக்கு மலையேற்றத்தைத் தொடங்கியது.”சுமார் 30 மைல் தூரத்தில் இருந்து அந்த அருவியின் அழகை நாம் காண முடியும். ஆனால் அதன் அடிவாரத்திற்குச் செல்ல அடர்ந்த காடுகள் வழியாக நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. முதல் 2 மணி நேரத்திலேயே, இரண்டு உதவி இயக்குனர்கள் களைப்படைந்து மயங்கி விழுந்தனர், அவர்களுக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கூட வந்தது,” என்று கமல் அந்த திகிலூட்டும் அந்த நாள் குறித்து விவரித்தார்.தொடர்ந்து பேசிய கமல், “அந்த குழப்பமான சூழ்நிலையில் நாங்கள் வழியை தவறவிட்டோம். எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்தோம். அப்போதுதான், புத்திசாலியான ஒரு இளம் மேய்ப்பனை நாங்கள் சந்தித்தோம். அவரால் செங்குத்தான மலைகளில் கூட ஒரு வெட்டுக்கிளியைப் போல எளிதாக ஏற முடிந்தது. நாங்கள் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக கூறி, எங்களை சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் காருக்கு அருகில் வரும்போது மாலை நேரம் ஆகிவிட்டது.ஸ்ருதி மிகவும் சோர்வாகிவிட்டாள், உதவி இயக்குனர்களுக்கு ஏற்பட்ட நிலை அவளுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அவளை ஜீன்ஸ் பேண்ட்டை பிடித்து தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அந்த உதவி இயக்குனர்களில் ஒருவருக்கு தலையில் தையல் போடப்பட்டது,” என்று அந்த ஆபத்தான பயணத்தை நினைவுகூர்ந்தார்.இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் தனது குழுவினரிடம் எப்போதும் கனிவுடன் இருக்க வேண்டும் என்று தான் முடிவு செய்ததாக கமல் தெரிவித்தார். “நான் உயிர் பிழைத்தேன், ஆனால்… அவருக்கு உணவைப் பற்றி கவலை இல்லை, ஆனால் எனக்கு உணவு முக்கியம், அவர் இன்னும் அதேபோல் தான் இருக்கிறார், அவர் மாற வேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஆனால் அவர் தன்னை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டார். மற்றவர்கள் அவரைப் பின்தொடர வசதியாக இப்போது கொஞ்சம் மெதுவாகச் செல்கிறார்,” என்று மணிரத்னத்தைப் பற்றி கமல் கூறினார்.கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் “தக் லைப்” திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஜாம்பவான்களும் சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இணைந்து பணியாற்றுவதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.