இலங்கை
குமுதினிப் படுகொலை: இன்று நினைவேந்தல்!

குமுதினிப் படுகொலை: இன்று நினைவேந்தல்!
குமுதினி படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெடுந்தீவில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிச் குமுதினி படகில் பயணித்த 33 தமிழர்கள், நடுக்கடலில் இடைமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைகளே ‘குமுதினிப் படுகொலைகள்’ என்ற பெயரில் அஞ்சலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.