இலங்கை
கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
காலியில் தடைசெய்யப்பட்ட மதுபானங்கள் தொடர்பான முறைப்பாட்டையடுத்து, தெலிகட காவல்துறைக்குட்பட்ட கினிமெல்லகஹ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் திடீர் சுற்றிவளைப்புக்குச் சென்ற காவல்துறையினரை அங்கு இருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்றுள்ளார்.
அதனால் குறித்த நபர்மீது காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்த 30 வயதுடைய நபரின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.