இலங்கை
கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
கொட்டாஞ்சேனை சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சம்பத் ஜயவர்தன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் சிலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
குறித்த சிறுமி வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் செயலாளரிடம் முதற்கட்டமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், உயிரிழந்த சிறுமியின் தாயிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், இந்த வழக்கை விசாரித்த பதில் நீதவான் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அன்றைய தினம் அவரது தாயிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.