இலங்கை
தெமட்டகொடை கொலைச் சம்பவத்தில் இளைஞர்கள் நால்வர் கைது

தெமட்டகொடை கொலைச் சம்பவத்தில் இளைஞர்கள் நால்வர் கைது
தெமட்டகொடை பொலிஸ் பிரிவில் கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (13) ஒருவர் தடிகளால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தனர்.
இந் நிலையில், இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் இன்று (15) அதிகாலை தெமட்டகொடை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளை மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்த 17 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தெமட்டகொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.