சினிமா
“RRR” மாதிரி நடிகர்களை 3 வருடம் கட்டிப்போட மாட்டேன்..! இயக்குநர் லோகேஷ் ஓபன்டாக்..!

“RRR” மாதிரி நடிகர்களை 3 வருடம் கட்டிப்போட மாட்டேன்..! இயக்குநர் லோகேஷ் ஓபன்டாக்..!
தமிழ் சினிமாவில் இளம் சாதனையாளர் இயக்குநராகத் திகழ்கின்றவர் லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘கைதி’ போன்ற வெற்றிப்படங்களின் இயக்குநராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘கூலி’ திரைப்படத்துடன் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘கூலி’ ஒரு மல்டி ஸ்டாரின் படம் என்றாலும், அது RRR போல நீண்டகாலமாக திட்டமிட்டு இயக்கப்பட்ட படம் அல்ல என லோகேஷ் கூறியிருந்தார். அவர் மேலும் தனது இயக்கத் திறமை பற்றியும், நடிகர்களிடம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கள் குறித்தும் சிறப்பாகப் பகிர்ந்துள்ளார்.‘கூலி’ என்பது ஒரு பரபரப்பான மாஸ் ஆக்சன் படமாக உருவாகி வருகின்றது. ரஜினியுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பது உறுதியாகிவிட்ட நிலையில், படம் குறித்து எதிர்பார்ப்பு குவிந்து வருகின்றது.மல்டி ஸ்டாரின் படம் என்பதனாலேயே, இது பெரும் திட்டமாக இருப்பதுடன் நீண்டகாலம் வேலை நடந்திருக்கும் என எல்லோருமே நினைத்து வந்தனர். ஆனால், இயக்குநர் லோகேஷ், இது தொடர்பான தவறான புரிதலை நேரடியாக விளக்கியுள்ளார். பேட்டியில் லோகேஷ் கூறியதாவது, “RRR போன்ற படங்கள் ஒரு பெரிய கனவுப் புராஜெக்ட். நான் எப்போதும் 6 முதல் 8 மாதத்துக்குள் எனது படங்களை முடித்துவிடுவேன். நடிகர்களிடம் நான் கேட்பது ஒன்று தான் ஒரே தோற்றத்தைப் படப்பிடிப்பு முழுக்கத் தொடருங்கள்’ என்பதுதான்.” எனத் தெரிவித்திருந்தார்.