பொழுதுபோக்கு
அண்ணன் – தங்கையை பிரிக்க சதி; மனைவியை பிரிவாரா கணவன்? கார்த்திகை தீபம், அண்ணா அப்டேட்!

அண்ணன் – தங்கையை பிரிக்க சதி; மனைவியை பிரிவாரா கணவன்? கார்த்திகை தீபம், அண்ணா அப்டேட்!
சண்முகம் இசக்கியை நிரந்தரமாக பிரிக்க திட்டமிடும் சௌந்தரபாண்டி.. வைஜெயந்தி செய்யும் சூழ்ச்சி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கியை பேச விடாமல் செய்த நிலையில் இன்று, இசக்கி வருத்தத்தில் இருக்க இன்னொரு பக்கம் சண்முகம் வைகுண்டத்துடன் ஜோசியர் ஒருவரை சந்தித்து அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி விட்டதால் திதி கொடுக்க நாள் குறிக்கிறான்.இதையடுத்து வைகுண்டம் சொந்த காரங்க எல்லாருக்கும் சொல்லணும் நீ போய் சௌந்தரபாண்டிக்கு சொல்லிடு என்று சொல்கிறாள். பிறகு சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்த சண்முகம் பாக்கியம் மற்றும் சௌந்தரபாண்டியிடம் திதி கொடுப்பது பற்றி சொல்கிறான். அடுத்து சௌந்தரபாண்டி என் புள்ள முத்துபாண்டியிடமும் சொல்லு என்று சொல்ல முத்துபாண்டியிடம் சொல்லும் போது இசக்கியையும் சேர்த்து அழைக்க இசக்கி சந்தோசப்படுகிறாள்.அடுத்து கடற்கரையில் திதி கொடுக்க ஏற்பாடுகள் நடக்க வீரா அரைநாள் பெர்மிஷன் கேட்க இன்ஸ்பெக்டர் வைஜெயந்திக்கு தகவல் கொடுக்க அவர் வீராவின் வண்டியை பெஞ்சர் செய்ய சொல்கிறாள். பிறகு கௌதமுக்கு போனை போட்டு ஸ்டேஷன் வரைக்கும் வர சொல்கிறாள். மறுபக்கம் சௌந்தரபாண்டி இசக்கியை திதி கொடுக்க போக விட கூடாது.. அண்ணனும் தங்கச்சியும் ஒன்னு சேர்ந்துட கூடாது என்று திட்டம் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தாலியை எடுத்து நீட்டிய துளசி.. அதிர்ச்சியான வெற்றி, நடந்தது என்ன? – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி சிசிடிவி காட்சிகளை அழித்த நிலையில் இன்று, தாலியை எடுத்தது யார் என்று கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் ஈஸ்வரமூர்த்தி குடும்பம் நாமே ஒரு தாலியை செய்து கோவிலுக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதனால் வெற்றி சற்று நிம்மதி அடைகிறான். அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த துளசி தனது கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி உண்டியலில் போட முயற்சிக்க அங்கு வந்த காமாட்சி அம்மா அவளை தடுத்து நிறுத்துகிறாள். அந்த தாலியும் கழுத்துக்கு வர ஒரு காரணம் இருக்கு. இதெல்லாம் முருகனோட விளையாட்டு. அவன் எல்லாத்தையும் காரணத்தோடு தான் செய்வான். உனக்கு கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும் என்று சொல்கிறாள்.இன்னொரு பக்கம் மகேஷ் தனது நிலம் வாங்குவதற்காக வந்திருக்க அஞ்சலிக்கு போன் செய்து எனக்கு இடம் ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து ரேவதி முருகனுக்காக ஒரு கிப்ட் வாங்கி வந்து அவனது கண்ணை மூடி கையில் காப்பு போட்டு விட இருவருக்கும் இடையே காதல் அதிகமாகிறது. பிறகு துளசி வெற்றியை தனியாக சந்தித்து பேசாமல் அமைதியாக நிற்க வெற்றி என்ன மேடம் சொல்லுங்க என்று கேட்கிறார்.துளசி கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து நீட்ட வெற்றி அதிர்ச்சி அடைகிறான். வெற்றி உண்மையை சொல்ல வர துளசி இது என் கழுத்துல எப்படி வந்தது என்று தெரியல, இதுக்கு காரணமானவர்களை நீங்க தான் கண்டு பிடிக்கணும் என்று உதவி கேட்க வெற்றி அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சாமுண்டீஸ்வரி அம்மாவின் மரணத்தில் மர்மம்.. உடையும் உண்மைகள் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதியை அபிராமி கோவிலுக்கு வர சொல்லி இருந்த நிலையில் இன்று, அபிராமி சித்தரை பார்த்ததாகவும் அவர் நீங்க இரண்டு பேரும் 5 வருடம் பிரிந்து இருக்க போவதாகவும் அதை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் சொன்னதாக சொல்கிறாள். பிறகு இருவரும் மறுக்க முடியாமல் பரிகாரம் செய்கின்றனர். பிறகு ரேவதி கார்த்தியிடம் நீங்க தான் உங்க அம்மா கிட்ட சொன்னீங்களா என்று சத்தம் போடுகிறாள். கார்த்திக் இல்லை என்று மறுக்கிறான். அடுத்து ராஜசேதுபதி ஊரில் இல்லாத காரணத்தால் கோவில் நகைகளை பேங்கில் இருந்து எடுத்து வர கார்த்திக் கையெழுத்து போட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கார்த்திக் இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்ல சந்திரகலா சிவனாண்டி இந்த விஷயம் அறிந்து கார்த்தியை மாட்டி விட திட்டம் போடுகின்றனர், ஆனால் கார்த்தி அந்த விஷயத்தையும் முறியடிக்கிறான்.இதையடுத்து சிவணாண்டியின் சித்தப்பா முத்துவேல் என்பவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வர சாமுண்டீஸ்வரி நீ ஜெயிலுக்கு போகவே நான் தான் காரணம். உஷாரா இரு என்று எச்சரிக்கிறான். அடுத்து கார்த்தியை பார்த்த முத்துவேல் சிவணாண்டியிடம் யார் அது என்று விசாரித்து ராஜசேதுபதியின் மகன் என தெரிந்து கொள்கிறான். தொடர்ந்து முத்துவேல் சிவணாண்டியிடம் சாமுண்டேஸ்வரி அம்மா சிவகாமி சாவுக்கு ராஜசேதுபதி காரணம் இல்ல, நான் தான் விஷத்தை கொடுத்து கொன்னேன் என்று பிளாஷ்பேக் கதையை சொல்கிறான்.இந்த விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய கூடாது என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.