தொழில்நுட்பம்
ஆண்ட்ராய்டு, கூகுள் குரோமில் புதிய அப்டேட்; இனி டாக்பேக் பயன்பாடு ரொம்ப ஈஸி

ஆண்ட்ராய்டு, கூகுள் குரோமில் புதிய அப்டேட்; இனி டாக்பேக் பயன்பாடு ரொம்ப ஈஸி
உலகளாவிய அணுகல்தன்மை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் குரோமுக்காக பல புதிய ஏ.ஐ மற்றும் அணுகல்தன்மை அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, கூகுள் ஜெமினியின் திறன்களை டாக்பேக்கிற்கு கொண்டு வந்தது. டாக்பேக் என்பது குறைவான அல்லது பார்வையில்லாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டின் உள்ளமைக்கப்பட்ட ஸ்க்ரீன் ரீடர் கருவியாகும். தற்போது, ஜெமினி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதாகவும், பயனர்கள் படங்களைப் பற்றி கேள்விகள் கேட்கவும் பதில்களைப் பெறவும் முடியும் என்றும் டெக் ஜெயிண்ட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. உதாரணமாக, ஒரு நண்பர் உங்களுக்கு ஒரு கிடாரின் படத்தை அனுப்பும்போது, ஜெமினி மூலம் இயங்கும் டாக்பேக் படத்தின் விளக்கத்தை அளிக்கும். மேலும், அதன் தயாரிப்பு மற்றும் நிறம் போன்ற விஷயங்களைப் பற்றிய தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், படத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் பார்க்கும்.கூகுள், எக்ஸ்பிரசிவ் கேப்ஷன்ஸ் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இது ஒலி உள்ள எதற்கும் நிகழ்நேர வசனங்களை வழங்குகிறது. ஏ.ஐ மூலம் இயங்கும் இந்த செயல்பாடு கிட்டத்தட்ட எல்லா பயன்பாடுகளிலும் வேலை செய்யும். மேலும், ஒலிகளுக்கான லேபிள்களையும் இது காண்பிக்கும். அதாவது, மக்கள் விஷயங்களைச் சொல்லும் விதத்தையும் இது படம்பிடிக்கும். உதாரணமாக, யாராவது ஒரு விளையாட்டுப் போட்டியில் “நோ” என்று கத்தினால் அல்லது “அமேசிங்” என்று சொன்னால், எக்ஸ்பிரசிவ் கேப்ஷன்ஸ் அந்த தொனியை அடையாளம் காண முடியும்.இந்த செயல்பாடு தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு வெளியிடப்படுகிறது. இருப்பினும், உங்கள் முதன்மை மொழியை ஆங்கிலமாக அமைத்திருக்க வேண்டும் மற்றும் ஆண்ட்ராய்டு 15 அல்லது அதற்கு மேல் புதிய பதிப்பில் இயங்கும் சாதனம் வைத்திருக்க வேண்டும்.குரோமைப் பொறுத்தவரை, PDF ஆவணத்தை ஸ்கேன் செய்வது இப்போது முன்பை விட எளிதாகிவிட்டது. முன்பு, ஸ்க்ரீன் ரீடர்கள் PDF கோப்புகளுடன் வேலை செய்யவில்லை. ஆனால் இப்போது கூகுள் குரோம் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் (OCR) ஐப் பயன்படுத்தி கோப்பில் உள்ள உரையை ஸ்கேன் செய்கிறது. இதன் பொருள் அவற்றை ஸ்க்ரீன் ரீடர்களால் படிக்க முடியும் என்பதாகும். கூகுள் பேஜ்-உம் குரோமை முன்பை விட பயனுள்ளதாக மாற்றுகிறது. மேலும், பயனர்கள் வலைப்பக்கத்தின் தோற்றத்தைப் பாதிக்காமல் உரையை பெரிதாக்க முடியும். பயனர்கள் இப்போது ஒரு ஸ்லைடரைப் பயன்படுத்தி உரையை பெரிதாக்கலாம். மேலும் ஒரு பக்கத்திற்கான அமைப்பை மாற்றலாம் அல்லது அனைத்து வலைத்தளங்களுக்கும் பொருந்தும்படி தேர்வு செய்யலாம்.