இலங்கை
இரும்பு கம்பிகள் மீது பாய்ந்த வேன் ; ஐவர் படுகாயம்

இரும்பு கம்பிகள் மீது பாய்ந்த வேன் ; ஐவர் படுகாயம்
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (15) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.