சினிமா
கமல் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கல..ஆனா!! பிரபல இயக்குநரின் மனைவி ஓபன் டாக்..

கமல் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கல..ஆனா!! பிரபல இயக்குநரின் மனைவி ஓபன் டாக்..
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சுஹாசினி. இயக்குநர் மணிரத்னமுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சுஹாசினி, பேட்டியொன்றில் தன் கணவர் மணி ரத்னம் இயக்கிய படங்களில் நடிக்கவில்லை என்றும் கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.அதில், மணிரத்னமின் முதல் படமான பல்லவி அனு பல்லவி படத்தில் என்னை நடிக்க கேட்டார். ஏதோ ஒரு காரணத்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். லட்சுமி மேடம் இருக்கும் போது எனக்கு என்ன ரோல் இருக்கப்போகிறது என்று கூறிவிட்டேன். பின் அஞ்சலி படத்தில் நான் ரேவதி ரோலில் நடிக்கவிருந்தது, பின் அதில் நடிக்கமுடியவில்லை.அப்படி என்றால் நான் கமலுடன் இதுவரை நான் நடிக்கவில்லை, அதுவும் பெரிய அநியாயம். தங்கையா, மகளா, எந்த ரோலிலும் நடிக்கவில்லை, கன்னட படத்தில் மட்டும் தான் நான் நடித்திருக்கிறேன்.நாயகன் படத்தில் கார்த்திகா ரோலில் நடிக்க கேட்டார், பின் புதுமுகம் தேவைப்பட்டதால் என்னை சேர்க்கவில்லை என்று சுஹாசினி தெரிவித்துள்ளார். அவர் எனக்கு சித்தப்பா முறைதான், ஆனால் எங்களுக்கு அவர் அண்ணன் தான் என்றும் தெரிவித்துள்ளார்.