Connect with us

டி.வி

“கயல்” சீரியலின் TRP மவுஸ் குறைந்துவிட்டதா..? சன் டீவி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Published

on

Loading

“கயல்” சீரியலின் TRP மவுஸ் குறைந்துவிட்டதா..? சன் டீவி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ் மக்கள் வீடுகளில் உறவாக நிலைபெற்று பல உள்ளங்களின் மனதைக் கொள்ளை கொண்ட தொலைக்காட்சியாக சன் டீவி விளங்குகின்றது. “தொலைக்காட்சி என்றாலே சன் டீவி தான்.!” என்ற அடையாளத்துடன், காலை முதல் இரவு வரை பல்வேறு சினிமா, நிகழ்ச்சி, சீரியல் தொகுப்புக்கள் என்பன ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், இந்த வெற்றியின் முக்கிய ரகசியமாக சன் டீவியின் தொடர்களே முன்னிலையில் காணப்படுகின்றன.அந்த வகையில், தற்போது சன் டீவியின் இரவு நேர சீரியல் நேரங்களில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ‘கயல்’ சீரியல் நேர மாற்றம் பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் டீவி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது வெளியான அதிரடி தகவலின்படி, அதிகளவான TRP ரேட்டிங்கைப் பெற்ற ‘கயல்’ சீரியல், தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் சைத்ரா மற்றும் சஞ்சீவ் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்துவருகின்றனர்.தொடரின் கதை, “சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண், வீட்டை தாங்கும் பொறுப்பு, சகோதரர்களின் திருமணம், அம்மாவின் உடல் நலக்குறைவு” போன்ற குடும்பப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அவற்றைத் தீர்க்கும் நாயகியாக “கயல்” என்ற கதாப்பாத்திரம் விளங்குகிறது.இப்பொழுது, TRP-யில் சிறந்த இடத்தை பிடித்திருந்தாலும், புதிய தொடர்களுக்கு இடம் வழங்கும் வகையில், இந்த தொடரை இரவு 10 மணி நேரத்திலிருந்து 7.30 மணிக்கு மாற்றும் திட்டத்தை சன் டீவி எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த மாற்றத்திற்குப் பின்னே ஒரு முக்கிய காரணம் உள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஆடுகளம்’ என்ற புதிய சீரியல், பரபரப்பை கிளப்பும் கதைக்களம், புதுமையான கதாநாயகர்கள், சிறப்பான வசனங்கள் ஆகியவற்றால் TRP-யில் முன்னேறி வருகின்றது. அதன் காரணமாகவே, அதிகமான பார்வையாளர்கள் இருக்கின்ற இரவு 10 மணி இடத்தை ‘ஆடுகளம்’ சீரியலுக்கு வழங்கி, ‘கயல்’ சீரியலை 7.30 மணிக்கு மாற்ற சன் டீவி முடிவு செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன