சினிமா
சமந்தாவின் காதல் வதந்திகள் எல்லாம் பொய்யா..? – அதிகாரபூர்வமாக விளக்கமளித்த மேலாளர்..!

சமந்தாவின் காதல் வதந்திகள் எல்லாம் பொய்யா..? – அதிகாரபூர்வமாக விளக்கமளித்த மேலாளர்..!
தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது அழகு, நடிப்புத் திறமை, ரசிகர்கள் மீது கொண்ட பாசம் ஆகியவற்றால் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல திகழ்கின்றார். புஷ்பா பாடலால் தேசிய அளவில் பிரபலமான இவர், கடந்த சில மாதங்களாக திரையுலகத்தில் இருந்த இடைவெளி எடுத்துள்ளார். இந்த சூழலில் சமந்தாவைச் சுற்றியுள்ள காதல் வதந்திகள் இணையத்தை அலறவைத்துள்ளன. இந்த தகவல்களை தடுத்து நிறுத்தும் வகையில் தற்போது சமந்தாவின் மேலாளர் நேரடியாக பேட்டி அளித்து, பலரது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.சமீபத்தில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவர், நிதிமோருவின் தோளில் சாய்ந்தபடி, சிரித்துக்கொண்டே படம் எடுத்திருந்தார்.இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதும், ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்தது. இது குறித்து மேலாளர் கூறியதாவது, “சமந்தாவின் காதல் விவகாரம் எதுவும் உண்மையில்லை. அதனை யாரும் நம்பாதீர்கள்.” என்றார். இதன் மூலமாக சமந்தாவின் காதல் விவகாரங்கள் தொடர்பான வதந்திகளுக்கு அவரது மேலாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.