நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

சமந்தா, தற்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakht Brahman) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதனிடையே ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இதன் மூலம் ‘சுபம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது. இதனால் பட புரொமோஷன் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்த சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். 

இயக்குநர் ராஜ், சமந்தாவை தனது ‘தி ஃபேமிலி மேன்’, ‘சிட்டாடெல்’ உள்ளிட்ட வெப் தொடர்களில் நடிக்க வைத்திருந்தார். இப்போது சமந்தா லீட் ரோலில் நடிக்கும் ‘ரக்த் பிரம்மாந்த்’ வெப் தொடரை இயக்கி வருகிறார். சமீப காலமாக சமந்தாவும் ராஜூவும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. முதலில் இருவரும் கடந்த பிப்ரவரியில் நடந்த உலக பிக்கல் பால் லீக் போட்டியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது சமந்தா, ராஜ் கையை பிடித்து கொண்டு நடந்து சென்றார். இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்பட்டது. பின்பு இருவரும் திருப்பதி கோயிலில் ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் டேட்டிங் தகவல் தீயாய் பரவ, இருவரும் அது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. இப்போது மீண்டும் ராஜுடன் இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்ததால் மீண்டும் டேட்டிங் தகவல் உலா வர தொடங்கியது.

Advertisement

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட சுபம் பட வரவேற்பு தொடர்பாக தியேட்டர் விசிட் அடிக்கும் புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் மீண்டும் ராஜுடன் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதனால் இவர்களது டேட்டிங் விவகாரம் வலுபெற தற்போது இது குறித்து சமந்தாவின் மேலாளர் ஒரு ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ளார். அவர் அது வெறும் வதந்தி என மறுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க ராஜின் மனைவி ஷ்யாமலி, சமந்தா ராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சில மணி நேரங்களிலே அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “என்னைப் பற்றி யோசிக்கும் நபர்களுக்கு மற்றும் என்னைப் பற்றி  பேசும், நினைக்கும், படிக்கும், எழுதும் நபர்கள் என அனைவருக்கும் என்னுடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுப்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவருக்கும் ராஜுக்கும் 2022ஆம் ஆண்டு விவாகரத்து நடந்ததாக கூறப்படுகிறது.