சினிமா
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! திவினேஷுக்கு சக போட்டியாளர்கள் செய்த செயல்..வீடியோ..

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! திவினேஷுக்கு சக போட்டியாளர்கள் செய்த செயல்..வீடியோ..
ஜீ தொலைக்காட்சியில் கடந்தவாரம் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சி. நேரு ஸ்டேடியத்தில் நடந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்து 6 இறுதிச்சுற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.அனைவரது மனதையும் கவர்ந்த திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். 2வது இடத்தினை யோகஸ்ரீயும் 3வது இடத்தினை ஹேமித்ராவும் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.டைட்டில் வின்னர் திவினேஷ் குறித்து இணையத்தில் பல வீடியோக்கள் ட்ரெண்ட்டாகி வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் நடந்த ஒரு எபிசோட்டில் திவினேஷுக்கு சக போட்டியாளர்கள் செய்த செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.திவினேஷ் வீட்டில் டிவி இல்லாததை அறிந்த போட்டியாளர்கள் அனைவரும் காசு சேமித்து டிவியை வாங்கி கொடுத்துள்ளனர். நிகழ்ச்சி குழு டிவியை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்