பொழுதுபோக்கு
சிட்டியின் வலையில் சிக்கிய ரோஹினி: முத்துவால் அவமானப்பட்ட மீனா: விஜயா உச்சக்கட்ட மகிழ்ச்சி!

சிட்டியின் வலையில் சிக்கிய ரோஹினி: முத்துவால் அவமானப்பட்ட மீனா: விஜயா உச்சக்கட்ட மகிழ்ச்சி!
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து தனது நண்பர்களுடன், அருண் வீட்டுக்கு சென்று பிரச்னை செய்ததை சத்யா பார்த்துவிட, முத்துவின் செயலால் மீனா அவமானப்பட்டு நிற்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், அருண் வீட்டின் முன்பு, முத்து நண்பர்களுடன் பிரச்னை செய்ய, அதை சத்யா பாத்துவிடுகிறான். இதனைத் தொடர்ந்து மீனாவுக்கு போன் செய்யும் சத்யா நடந்ததை சொல்லி முத்துவை அழைத்து வருவதாக சொல்கிறான். ஆனால் மீனா வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறாள். அதன்பிறகு மீனா வீட்டுக்கு வர முத்துவும் வந்துவிடுகிறான்.முத்து குடித்திருப்பதை பார்த்த மீனா, ஏற்கனவே இருக்க பிரச்னை போதாதா என்று சத்தம்போட, லைசன்ஸ் போனதுல, கஷ்டமாக இருக்கிறது என்று முத்து சொல்ல, அதான் போலீசிடம் பேசி அவரும் வாங்கி தரேணு சொல்லிட்டாரே அப்புறம் எதற்காக அருண் வீட்டுக்கு போய் சண்டை போட்டீங்க என்று கேட்க, ஏற்கனவே அருண் உங்க மேல கோபமா இருக்காரு இதனால் அடுத்து என்ன பிரச்னை வரப்போகுதோ என்று புலம்புகிறாள்.எனக்கு லைசன்ஸ் இல்லை, வேலையும் இல்லை என்று புலம்பும் முத்து, மறுநாள் வீட்டை பெறுக்கிக்கொண்டு இருக்க, இதை பார்த்து விஜயா சிரிக்கிறாள். அப்போது அண்ணாமலையும் மீனாவும் வர, முத்துவை மீனா திட்டுகிறாள். நான் சும்மாதானே இருக்கேன். அதனால் செய்தேன் என்று சொல்ல, அதான் பெருக்கிட்டானே இனிமே துணி துவைக்கட்டும் என்று விஜயா சொல்ல, கடுப்பான மீனா, துடப்பத்தை பிடுங்கி விசிறி அடிக்க, பயந்து ஓடுகிறாள் விஜயா.அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் மனைவி மீனாவை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறாள். மீனா அங்கிருந்து கிளம்பியதும், முத்துவுக்கு அண்ணாமலை அட்வைஸ் கொடுக்கிறார். இந்த பக்கம், சிட்டி ரோஹினியை அழைக்க அவளும் வருகிறாள். அப்போது சிட்டி ரோஹினியின் பி.ஏ.விடம் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதை ரோஹினி ஒளிந்துகொண்டு கேட்கிறாள். அதன்பிறகு, சிட்டி ரோஹினியிடம், ஒரு செயினை கொடுத்து இது பழைமைவாய்ந்த செயின் வெளியில் விற்றால் 3 லட்சம் போகும் உங்களுக்கு ஒரு லட்சத்திற்கு தருகிறேன் என்று சொல்கிறான்.இதை கேட்ட ரோஹினி சந்தோஷப்பட்டாலும் இப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, ஒரு குறிப்பிட்ட நாள் டைம் கொடுக்கும் சிட்டி அதற்குள் பணத்தை கொடுக்குமாறு கேட்கிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.