விளையாட்டு
சிறப்பு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்; தத்தெடுக்கும் பி.சி.சி.ஐ: விளையாட்டு அமைச்சகம் தகவல்

சிறப்பு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்; தத்தெடுக்கும் பி.சி.சி.ஐ: விளையாட்டு அமைச்சகம் தகவல்
சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியா தொடர் சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது. நாட்டின் வீரர், வீராங்கனைகள் இந்தியாவின் கொடியை வானுயர பறக்கவிட்ட பதக்கங்களை வென்று வருகிறார்கள். இந்நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சர்வதேச அளவில் வெற்றிகளை குவிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிறப்பு ஒலிம்பிக் பயிற்சி மையங்களை நிறுவும் விளையாட்டு அமைச்சகத்தின் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ ‘இரண்டு முதல் மூன்று’ விளையாட்டுகளை தத்தெடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறது.கார்ப்பரேட் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பி.சி.சி.ஐ ஆகியவை தலா ஒரு விளையாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில ஒலிம்பிக் பயிற்சி மையங்களுக்கு நிதியளிக்க ஆர்வமாக இருப்பதாக விளையாட்டு அமைச்சக வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒலிம்பிக் மையங்களை உருவாக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் 100 முதல் 200 திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, இந்த ஒலிம்பிக் சுழற்சி மற்றும் அடுத்த ஒலிம்பிக் சுழற்சிக்காக வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்.இன்று, விளையாட்டு அமைச்சருடன் 58 கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திப்பு நடத்தின. அவர்கள் அத்தகைய முயற்சியில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இரண்டு அல்லது மூன்று விளையாட்டுகளுக்கான அனைத்து செலவுகளையும் பி.சி.சி.ஐ போன்றவர்கள் ஏற்கத் தயாராக உள்ளனர்,” என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ ரூ.8.5 கோடி நிதி உதவி வழங்கியது. இந்திய விளையாட்டு ஆணையத்தால் இயக்கப்படும் 23 தேசிய சிறப்பு மையங்கள் இந்தியாவில் உள்ளன. இருப்பினும், அவற்றில் மூன்று மட்டுமே ஒரு விளையாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ரோஹ்தக்கில் குத்துச்சண்டை, டெல்லியில் நீச்சல் மற்றும் டெல்லியில் துப்பாக்கிச் சூடு. ஆலோசனைசர்வதேச அளவில் இந்தியாவில் கணிசமான பலம் இல்லாத நிலையில், விளையாட்டுத் தரத்தை மேம்படுத்த இந்திய வம்சாவளி வீரர்களை ஈடுபடுத்தும் யோசனையையும் விளையாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக இந்திய கால்பந்தில், இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (ஓ.சி.ஐ) இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஓ.சி.ஐ அட்டைதாரர்கள் இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்றவர்கள்.2008 ஆம் ஆண்டில், அப்போதைய விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில், இந்திய குடிமக்கள் மட்டுமே சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்கும் கொள்கையை உருவாக்கினார், இதனால் இந்திய வம்சாவளி நபர் (பி.ஐ.ஓ) மற்றும் ஓ.சி.ஐ அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள். உள்நாட்டில் வளர்க்கப்படும் திறமையாளர்களின் வளர்ச்சியை அனுமதிப்பதே இதன் யோசனையாக இருந்தது.