நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனின் இல்லத்தில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.  டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இந்த சோதனையானது நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதே சமயம் பல்வேறு தொழிலதிபர்கள் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த வகையில் தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’, அதர்வா முரளி நடிக்கும் ‘இதயம் முரளி’ ஆகிய படங்களை தனது ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இதில் இதயம் முரளி படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த படங்கள் மட்டுமல்லாது சிம்புவின் 49வது படத்தையும் தயாரிக்கிறார். 

Advertisement

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தினார். மேலும் பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தியிருந்தனர். ஆகாஷ் பாஸ்கரனின் மனைவி தாரணி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்துவின் மகள் வழி பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.