இலங்கை
நிதி அமைச்சின் சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட முடிவு

நிதி அமைச்சின் சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட முடிவு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கு உரித்தான எரிபொருள் செயற்பாடு குறைந்த மற்றும் பராமரிப்பு செலவு கூடிய சொகுசு வாகனங்களுக்காக விலை மனுகோரி ஏலத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புணர்வை ஊக்குவித்தல் என்ற அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கு உரித்தான 10 சொகுசு வாகனங்களுக்கு விலை மனு கோரி ஏலத்தில் விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள வாகனங்களை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று பார்வையிட்டுள்ளார்.
இந்த வாகனங்களில் பி.எம்.டபிள்யூ ரக 2 வாகனங்கள், நிசான் எக்ஸ், ட்ரைல் ரக ஒரு வாகனம்.
லேன்ட் ரோவர் டிபெண்டர் ரக2வானங்கள், டோக்கியோ லேண்ட் க்ருயிசர் ரக 3 வாகனங்கள், மிட்சுபிஷி மொன்டேரோ ரக ஒரு வாகனம் மற்றும் மிட்சுபிஷி வகையில் பெஜிரோ வாகனம் ஒன்றும் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டு விலை மனு கோரி இருப்பதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.