சினிமா
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கதிருக்கு அடித்த ஜாக்பாட்…! என்ன தெரியுமா..?

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கதிருக்கு அடித்த ஜாக்பாட்…! என்ன தெரியுமா..?
சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர் குமரன் தங்கராஜன். விஜய் டீவியில் ஒளிபரப்பான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் மூலம் அவர் அதிகளவான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தார். இப்போது, அந்த சிறியதிரை ஹீரோ, வெள்ளித்திரையில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். அவரின் முதல் திரைப்படமான “குமாரசம்பவம்” மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு படக்குழுவினர் ரொம்பவே வித்தியாசமானதொரு தலைப்பை வைத்துள்ளனர். தமிழ் இலக்கிய மரபில் பெரிய இடம் பிடித்திருக்கும் “குமாரசம்பவம்” என்ற பெயரை வைத்திருப்பதால், படம் ஒரு பரவலான கதைக்களத்துடன் வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.இப்படத்தை நடிகரும், இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். முன்னதாக சில சின்னதிரையில் ஆர்வம் செலுத்திய இவர் தற்பொழுது திரைப்படத்தை உருவாக்கி தனது திறமையை உலகிற்கு நிரூபிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் குமரன் தங்கராஜனைத் தவிர, பல முக்கிய நடிகர்கள் சிறப்பான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, குமரவேல், பாலசரவணன், ஜி.எம். குமார் மற்றும் வினோத் சாகர் உள்ளிட்டோர் இப்படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்துள்ளனர்.